சிங்கப்பூர் சிவாலயங்களில் ஜனவரி 18 ஆம் தேதி தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஈசூன் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் தைப்பூச மஹோற்சவம் பாரம்பரிய முறைப்படி மிகச் சிறப்பாக நடைபெற்றது. வைகறையில் நான்கு மணிக்கு ஆலயக் காவடி முதலாவதாக ஸ்ரீ முருகப்பெருமானுக்கு சமர்ப்பித்திட மற்ற காவடிகள் தொடர்ந்தன.
மூன்று தடுப்பூசிகள் செலுத்திக் கொண்ட முன்பதிவு செய்து கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.பகல் 12 மணி வரை காவடிகள் அனுமதிக்கப்பட்டன. பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்திய பால் குட அபிஷேகம் கண்குளிரக் காட்சியளித்தன. இரவு 7.15 மணிக்கு பிற ஆலயங்களின் வரிசை மேள தாளங்களுடன் வருகை புரிந்து சமர்ப்பிக்கப்பட்டன.
ஏழு முப்பதுக்கு உபயதாரர் சிறப்புப் பூஜை நிறைவு பெற்று எட்டு மணிக்கு சர்வ அலங்கார நாயகராக ஸ்ரீ பாலசுப்பிரமணியர் மயில் வாகனத்தில் பக்தர்களின் “ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ...ஞானவேல் முருகனுக்கு அரோகரா “ என்ற முழக்கத்திடையே ஆலயம் வலம் வந்து அருள்பாலித்தார். வழக்கமாகத் தனிக் கொட்டகை அமைத்து நாள் முழுவதும் ஆறுமுகனின் அன்னதான நிகழ்வு நடைபெறுவது இவ்வாண்டு தவிர்க்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆலய நிர்வாகத்தினர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.