சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பிகா சமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வர சுவாமிக்கு ஸ்ரீ மஹந்யாச ஏகாதச ருத்ராபிஷேகம் ஜனவரி 22 ஆம் தேதி மாலை மற்றும் 23 ஆம் தேதி காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. ருத்ர பாராயணம் – சிவ பஞ்சாக்க்ஷர மூல மந்திர ஹோமம் நடைபெற்று புனித கலசம் ஆலயம் வலம் வரப் பெற்று கலசாபிஷேகமும் பதினெண் வகை வாசனாதித் திரவியங்களால் விசேஷ அபிஷேகமும் மெய் சிலிர்க்க நடைபெற்றன. தொடர்ந்து சோடஸ உபசார மகா தீபாராதனை நடைபெற்றது.
மாலையில் ருத்ர திரிசதி அர்ச்சனையும் நடைபெற்று உலக மாந்தர் வளமும் நலமும் மகிழ்வும் நிறைவும் பெற கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றது. ஆலய நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.