திருகோணமலையில் புதிய தலைமுறைக்கான வாழ்க்கை எழுச்சி | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

திருகோணமலையில் புதிய தலைமுறைக்கான வாழ்க்கை எழுச்சி

ஜனவரி 26,2022 

Comments

 திருகோணமலை ரோட்டரி கழகம், இலங்கைத் துறை முகத்துவாரம் இந்துக் கல்லூரி, கோபாலபுரம் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் திருகோணமலையில் உள்ள குச்சவெளி விவேகானந்தா கல்லூரி ஆகிய பாடசாலைகளில் உலகளாவிய மானிய திட்டம்- புதிய தலைமுறைக்கான வாழ்க்கை எழுச்சி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

திட்டத்தின் விபரம்

பயனாளிகளின் எண்ணிக்கை குடும்பங்கள் (பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் வறுமைக் கோட்டின் கீழ்) : - 519

வாழ்வாதாரத் திட்டமாகிய கோழி வளர்ப்பின் மூலமாகக் கிடைக்கின்ற வருமானம் ஊடாக அவர்களாலேயே பிள்ளைகளுக்கு காலை உணவினை வீடுகளிலே வழங்க வழி செய்யப்பட்டுள்ளது.

காலை உணவு - 600 குழந்தைகள்

பாடசாலை கற்றல் உபகரணங்கள் - 1000 பொதிகள்

மாணவர்களுக்கான சைக்கிள்கள் - 80.

போக்குவரத்து வசதியற்ற தூர இடத்திலிருந்து கால்நடையாக பாடசடிலைக்கு வரும் மாணவர்களுக்காக துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளதோடு வருமானம் குறைந்த மாணவர்களுக்கான பாடசாலை உபகரணப் பொதிகளும் அளிக்கப்பட்டுள்ளது.

இத் திடத்தின் இறுதி நிகழ்வாக 25 ஆம் திகதி செவ்வாய் கிழமை அன்று இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக் கல்லூரியில் சைக்கிள்களை கையளிக்கப் பட்ட்து.

இந்த நிகழ்ச்சிக்கு திருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர் அகிலன். திட்டத்தின் பொறுப்பாளரும் முன்னாள் தலைவருமாகிய சிவசங்கர், முன்னாள் தலைவர்களான மருத்துவர் குணாளன், திருமுகம் மற்றும் அடுத்த தலைவரான கிட்டினதாஸ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள், அபிவிருத்தி சங்கத் உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

- நமது செய்தியாளர் ஞானகுணாளன்



Advertisement
மேலும் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மே 27 முதல் 29 வரை இலங்கையில் மகா சக்தி யோகம்

மே 27 முதல் 29 வரை இலங்கையில் மகா சக்தி யோகம்...

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us