மலேஷியா தலைநகர் கோலாலம்பூர் இந்திய தூதரகத்தில் 73- வது குடியரசு தின கொடியேற்ற விழா இந்திய தூதர் பி.என்.ரெட்டி தலைமையில் கொண்டாடப்பட்டது. கோலாலம்பூர், லோரங் டுத்தாவில், 'இந்தியா ஹவுஸ்' அமைந்துள்ளது. இந்திய தூதரக இல்லத்தில் காலை 8.15 - மணிக்கு மலேஷியாவாழ் இந்தியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் கலந்துகொண்டனர். மலேஷிய நேரம் காலை இந்திய தேசியகீத பாடலுடன் விழா துவங்கியது, மலேசியாவிற்கான இந்திய தூதர் தேசியக் கொடியைப் பறக்க விட்டு, இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின உரையை வாசித்தார். தேச பக்தி பாடல்கள் கொண்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது குடியரசுதின விழாவில் மலேசியாவின் பல்வேறு பகுதில் வாழும் ஏராளமான இந்தியர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மேலும் தூதரக அதிகாரிகள், பல்வேறு இந்திய அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
- நமது செய்தியாளர் வெங்கடேசன்
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.