மருந்து ஏற்றுமதியில் கால்பதிக்கும் மலேசிய தமிழரின் "பயோ கேர்" நிறுவனம் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

மருந்து ஏற்றுமதியில் கால்பதிக்கும் மலேசிய தமிழரின் "பயோ கேர்" நிறுவனம்

ஜனவரி 28,2022 

Comments

கோலாலம்பூர்: மலேசிய தமிழரான சரவணன் கடந்த 2005ஆம் ஆண்டு மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களைச் சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்) மற்றும் விநியோகம் வாயிலாக மருத்துவத் துறையில் கால் பதித்தார். மேலும் பேராவில் உள்ள ஸ்ரீ இஸ்கந்தர் பகுதியில் 2018 ஆம் ஆண்டு 'பயோ கேர்' மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, மருத்துவ துறையில் புதிய மைல்கல்களை எட்டிப்பிடித்து சாதனை படைத்து வருகிறார்.

இந்நிறுவனத்தின் ஆஸ்துமா இன்ஹேலர் மருந்து மலேசியாவில் பிரசித்தி பெற்றது. மேலும், மலேசியாவின் தேசிய மருந்து ஒழுங்குமுறை முகமையால் (மலேசிய நேஷனல் பார்மஸிட்டிகள் ரெகுலேட்டரி ஏஜென்சி -இல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்து கடைகளில் பல ஆண்டுகளாக கிடைக்க பெற்று வருகிறது இந்த ஆஸ்துமா இன்ஹேலர்.

இந்நிலையில், 'பயோ கேர்' நிறுவனம் தற்போது வெளிநாடுகளிலும் கிளை பரப்பத் தொடங்கி உள்ளது. இதுகுறித்து ஏற்றுமதி பிரிவு மேலாளர் சுரேந்திரன் கூறும்போது நடப்பு ஆண்டில் முதல் முயற்சியாக புரூணை மற்றும் நேபாளம் நாடுகளுக்கு தனது பொருள்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கி உள்ளது. மேலும் ஒன்பது நாடுகளில் இம்மருந்தைப் பதிவு செய்து விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.அந்நாடுகளில் உரிய அனுமதி கிடைக்கப் பெற்றதும், அங்கு உள்ளவர்களும் பயன் அடைவர். இப்புதிய மைல்கல்லை எட்டிப்பிடித்ததன் மூலம் 'பயோ கேர்' நிறுவனமானது, ஆஸ்துமா மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்த மலேசிய நிறுவனம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது.

மக்களுக்கு உதவும் வகையில் தரமான மருந்துகளை அறிமுகப்படுத்துவதில் 'பயோ கேர்' நிறுவனம் தொடர்ந்து தன் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொள்ளும் என்கிறார் நிர்வாக இயக்குனர் சரவணன்.

- நமது செய்தியாளர் வெங்கடேசன்

Advertisement
மேலும் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us