மலேசிய எழுத்தாளர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் உயரிய அங்கீகாரமான ‘தமிழ்த்தாய்’ விருது மனநிறைவை அளிப்பதாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தலைவர் பெ.இராஜேந்திரன் கூறுகின்றார்.
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு விருதுகளை அறிவித்திருந்தார். அவற்றில் சிறந்த தமிழ் அமைப்புக்கான விருதும் அடங்கும்.
‘தமிழ்த் தாய்’ எனப்படும் விருதை இவ்வாண்டு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பெறுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்து ஐந்து இலட்சம் ரூபாய், கேடயம், சான்றிதழ் ஆகியவையும் வழங்கி இருக்கின்றார். 2020-ஆம் ஆண்டுக்குப் பின்னர் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு தமிழக அரசு வழங்கும் இரண்டாவது விருதாக இது அமைகிறது.
மலேசிய தமிழ் இலக்கியவாதிகளுக்கும் இலக்கியத்திற்கும் தமிழகத்தில் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பரவலான அறிமுகத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தர தாம் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு, பலன் கிடைத்திருப்பதாக இராஜேந்திரன் தெரிவித்திருக்கின்றார்.
இதனிடையே சிறந்த தமிழ் அமைப்புக்கானத் ‘தமிழ்த் தாய்’ விருது இவ்வாண்டு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு வழங்கப்பட்டிருப்பது மிகப்பெரிய கிரீடம் என்று இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான சிறப்பு தூதருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறியிருக்கின்றார். இராஜேந்திரனின் தொடர் முன்னெடுப்புகளின் வழி உலகளாவிய நிலையில் எழுத்தாளர் சங்கம் சிறந்த அமைப்பாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இதுபோன்ற அங்கீகாரங்கள் கிடைக்க எழுத்தாளர் சங்கம் இன்னும் அதிகமான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் கேட்டுகொண்டார்.
இவ்வாண்டு மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் மணிவிழாவைக் கொண்டவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- நமது செய்தியாளர் வெங்கடேசன்
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.