திருகோணமலை நகரத்தில் மடத்தடிச் சந்தியில் இருந்து ஆரம்பமாகும் திருஞானசம்பந்தர் வீதி சிவன் வீதியோடு சந்திக்கும் புள்ளியில் சிவபுரி என்னுமிடத்தில் செங்கற்ப்பண்ணைக் குளத்திற்கு முன்புறமாக அமர்ந்து எம்பெருமான் சிவன் எமது நகரத்து மக்களுக்கு அருள் பாலிக்கின்றார்.
இத்திருத்தலத்தின் தல வரலாறு யாதெனில், காசியிலிருந்து கோணநாதரை தரிசிக்க வந்த சிவஞானமுனிவர் என்ற சந்நியாசி ஆத்மார்த்த பூஜைக்காக கொண்டுவந்த லிங்கத்தை திருகோணமலை மண்ணில் ஸ்தாபிக்கும்படி அவருக்கு கனவில் கட்டளையாகிடவே அதனை அவர் சோமலிங்க முதலியார் என்பவரிடம் கையளித்தார்.
அந்த காசியில் இருந்து வந்த லிங்கத்தை காசி விஸ்வநாதர் என எண்ணிச் சோமலிங்க முதலியார் என்பவர் வாணிபதெரு என்று அன்றும் மத்திய வீதி என்று இன்றும் அழைக்கப்படும் இடத்தின் ஒரு காணியில் சிறு கொட்டில் அமைத்து வழிபட்டுவந்தார்.
அவர்காலத்தின் பின் அவர் வம்சத்தில் வந்த கதிர்காம முதலியார் என்பவர் விஸ்வநாத சிவன்கோவிலை கட்டிஎழுப்பி ஜீரணோர்த்தன புனருத்தாரண மகாகும்பாபிஷேகம் செய்துமுடிக்க ஆசைப்பட்டார். 'கங்கைகண்ட கதிர்காமர்' என ஊர்மக்களால் அழைக்கப்பட்ட கதிர்காம முதலியாரே இந்த செங்கப்பண்ணை குளத்தருகே துவரங்காடு என்ற பகுதியில் சிவபெருமானுக்கு “விஸ்வநாத சிவன் கோவில்” அமைத்து அவர் ஆசைப்படியே மகாகும்பாபிஷேகத்ததையும் நடத்தி முடித்தார்.
ஆரம்பத்தில் கதிர்காமமுதலியாரின் வம்சத்தவர்களினால் பரிபாலிக்கப்பட்ட கோவில் இன்று தேர்வு செய்யபடும் நிர்வாக சபையினால் பரமரிக்கப்படுவது சிறப்பானதே.. அத்தோடு சைவ சமயத்தின் அத்தனை விரதங்களும் திரு விழாக்களும் விமரிசையாக இத்தலத்தில் கொண்டாடப்பட்டு வருவது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
- நமது செய்தியாளர் ஞானகுணாளன்
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 36 வது தமிழ் விழா விவரம்...
ஜூன் 18 ல் பாங்காக்கில் 9 ம் ஆண்டு உலக யோகா தினம்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.