கம்பாலா:23 உகாசேவா பேரமைப்பின் 2022-2025 ஆண்டு நிர்வாகத்தின் முதல் சிறப்பு செயற்குழு கூட்டம் கம்பாலாவில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் வாஹித் முஹம்மது தலைமை வகித்தார், உபதலைவரும் முன்னாள் பொதுச் செயலாளருமான எம்மெஸ் சலீம் புதிய செயலாளர் சாகுல் ஹமீதுக்கு மினிட் உரை கோப்புகளை ஒப்படைத்தார். பொதுச் செயலாளரும் முன்னாள் பொருளாளருமான சாகுல் ஹமீது புதிய இணை பொருளாளர் முகம்மது புகாரியிடம் கணக்கு வழக்குகளின் கோப்புகளை ஒப்படைத்தார். தேர்வு குழு தலைவர் முஹமது காஜா புதிய செயற்குழு உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
உகாண்டா பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு உகாசேவா சார்பாக ஆண்டுதோறும் ஊக்க சான்றிதழ்கள் வழங்கி மகிழ்கிறது. ஏழாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு ஆகிய கல்வியாண்டுகளை முடித்த 28 மாணாக்கர்களுக்கு கல்விக்குரிய ஊக்க சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மாணவர்களுடன் அவர்தம் பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள். செயற்குழு உறுப்பினர்கள், அவர்தம் குடும்பத்தினருடன் கலந்து சிறப்பித்தார்கள். அனைவருக்கும் சுவையான மதிய உணவுடன் விழா இனிதே நிறைவுப்பெற்றது. அமைப்பின் பௌண்டர் யூனுஸ் நன்றி கூறினார்.
- தினமலர் வாசகர் நூருல் தவ்ஃபீக்
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.