'வாழ்வியல் இலக்கியப் பொழில்' அமைப்பின் 54 ஆவது மாதாந்திர நிகழ்ச்சி தமிழ்மொழி விழாவின் ‘இலக்கியச் சங்கமம்-2022’ சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்றது. வாழ்க நிரந்தரம் என்ற தமிழ் வணக்கப் பாடலதை் தொடர்ந்து “நீர்தானே உயிர்க்கெல்லாம் முதலானவன்...” என்ற பாடலுக்கு திருக்குமரன் அக்ஷிதா பரதநாட்டியம் ஆடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். செயலவை உறுப்பினர் கோமதியின் வரவேற்பைத் தொடர்ந்து “பொழில் வாழ்த்துப் பாடல்” இடம்பெற்றது.
வாழ்வியல் இலக்கியப் பொழில் இவ்வாண்டு இலக்கியப் போட்டிகளை11 பிரிவுகளில் நடத்தியது. இலக்கியப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றவர்கள் தமது படைப்புகளை மீண்டும் வழங்க அழைக்கப்பட்டனர். முதலில் பாலர்பள்ளி பிரிவில் மாறுவேடப் போட்டி, நிலா சபரிநாதன்‘ஔவையார்’ வேடமேற்றுவந்துஅசத்தினார்.தொடக்கநிலை-1, குமரவேல் பிரணவஸ்ரீ ‘கொன்றை வேந்தன்’ வரிகளை வழங்கினார். தொடக்கநிலை-2, ஜோஷித் ‘நன்னெறி’ நூலிலிருந்துஇரண்டுவெண்பாக்களோடுவந்தார். தொடக்கநிலை-3, பௌலா சாமியப்பா ‘இனியவைநாற்பது’ நூலிலிருந்துமூன்றுவெண்பாக்களோடுவந்தார். தொடக்கநிலை-4, பாலாஜி கனிஷ்கா ‘பாரதியார்’ கவிதையை வழங்கினார். தொடக்கநிலை-5/6, செந்தில்நாதன் ரோஷன்‘சிறுதானிய உணவும் துரித உணவும்’ என்ற தலைப்பில் பேசினார். லக்ஷ்னா ராஜதுரை, அக்ஷரா சுரேஷ், இராஜவெங்கற்றாமன் ரக்ஷனா லத்திகா மற்றும் ஜீவந்திகா முத்துக்குமார் முறையே உயர்நிலை 1 முதல் 4 வரை ‘சிங்கப்பூரில் இந்தியக் கலாச்சார விழாக்கள்’என்ற தலைப்பில் பேசி முதலிடத்தை பெற்றவர்கள் மீண்டும் படைத்தனர்.
அடுத்துப் பெரியவர்கள் பிரிவில் ‘புலி’ என்ற தலைப்பில் கவிதை/கட்டுரை எழுதியவர்களில் தமயந்தி வள்ளியப்பன்பரிசினைப் பெற்றார். இந்த போட்டியின் நடுவர்கள் தம்முடைய கருத்துகளை வழங்கினர். தொடர்ந்து அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி ‘கொடை’ என்ற தலைப்பில் தலைமையுரையாற்றினார். பாரி, வள்லலார், கர்ணன் என தமிழிலக்கியம் கண்ட கொடையாளர்களைப் பற்றியும், தமிழ் தோன்றிய இடமான தமிழ்நாடு – இந்தியா, தமிழ் பரவிய அயலக நாடுகளில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகியன சீரான தட்பவெப்பநிலையில் இருப்பது இயற்கை தந்த கொடையெனவும்விவரித்தார்.
சிங்கைத் தமிழ்ச்சங்க தலைவர் விஜி ஜெகதீஷ் வாழ்த்துரை வழங்க, சிறப்பு விருந்தினரான தேசியக் கல்விக் கழக இணைப் பேராசிரியர் முனைவர் சீதா லட்சுமி (ஆசியமொழிகள் மற்றும் பண்பாடுகள்துறை) தமிழிலக்கியங்களில் குறிப்பாக சங்க இலக்கியங்களில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளை தம்முடைய உரையில் வழங்கினார். தமிழகம், பட்டுக்கோட்டையிலிருந்து கலந்துகொண்ட பேராசிரியர் முனைவர் மு.பாலசுரமணியன் அவர்கள் ‘அறத்தாறு இதுவென அறியக் காட்டி....!’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். புறநானூறு பாடல்களில் பலவற்றை மேற்கோள்காட்டி புறநானூறு என்பது அறநானூறு என்ற புதியதொரு சிந்தனையில் பேசியது அனைவரையும் கவர்ந்தது.
இலக்கியப் போட்டியில் பரிசுபெற்ற மாணவர்களுக்கு கோப்பையும், . கோப்பையை எங்கு பெற்றுக்கொள்வது என்றும் அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியை நெறிப்படுத்திய கோமதி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியின் காணொளியைக் காண இணைப்பு கீழே:
https://www.facebook.com/100023627371055/videos/402197291314014/
வலைப்பதிவிற்காண இணைப்பு கீழே:
www.vazhviyalilakkiyapozhil.blogspot.com
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.