சிங்கப்பூர் மீடியாகார்ப் செய்தி – நடப்பு விவகாரப் பிரிவும் – தமிழ் மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் சிங்கப்பூர்ப் பழம்பெரும் நாடகக் கலைஞர் ச.வரதன் “ தமிழ்ச்சுடர் “ விருதளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். இவரோடு சிங்கப்பூர் முன்னோடி எழுத்தாளர் இராம.கண்ணபிரானும் தமிழ்ச்சுடர் விருது பெற்றுப் பெருமைப்படுத்தப்பட்டார். செம்பவாங் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் விருதளித்துச் சிறப்பித்தார்.
கலைஞர் வரதன் 1953 ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரின் நாடகக் கலைக்குத் தொண்டாற்றி வருகிறார். 1955 – இல் பகுத்தறிவு நாடகக் குழுவைத் தோற்றுவித்து கலைஞர் கருணாநிதியின் நச்சுக் கோப்பை நாடகத்தை நடத்தி “ தமிழ் எங்கள் உயிர் “ நிதிக்கு நன்கொடை அளித்துள்ளார். 1970 –இல் சிங்கப்பூர்க் கலைஞர்களை ஒன்று திரட்டி சிங்கப்பூர் கலைஞர் சங்கம் நிறுவினார். சிங்கப்பூர் வானொலி – தொலைக் காட்சி நாடகங்கள் பலவற்றில் பங்கேற்றுள்ளார். பதின்மூன்று நூல்களை எழுதியுள்ள இவர் தமது நாடக உலக நினைவுகளைத் தொகுத்து “ நீங்கா நினைவலைகள் “ எனும் நூலைத் தற்போது தயாரித்துள்ளதாக எமது செய்தியாளரிடம் கூறினார். கலை வளர்க்க வயது ஒரு தடையன்று என்று கம்பீரமாகக் கூறுகிறார்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.