உகாசேவா அமைப்பின் ரமலான் உதவிகள் வழங்குதல் நிகழ்வு உகாண்டா தலைநகர் கம்பாவில் 10/04/2022, ஞாயிறு அன்று காலை 10.30 நடைபெற்றது. உகாசேவா பேரமைப்பு கடந்து பதிமூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ஆண்டுதோறும் ரமலான் மாதம் உணவு பொருட்கள் வினியோகம் செய்து வருகிறது. ஏழை மக்கள் வசித்திடும் சுமார் 32 ஆதரவற்றோர் பராமரிப்பு இல்லங்கள் மற்றும் சமுதாய பகுதிகளை தேர்ந்தெடுத்து அமைப்பின் உறுப்பினர்களின் நன்கொடை, உகாண்டாவில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களான மண்டேலா தொழிலக குழுமம், முக்வானோ உற்பத்தியக குழுமம், சன் உற்பத்தியக குழுமம் ஆகியவற்றின் உதவியடன் வினியோகத்து வருகிறது.
நிகழ்வில் அமைப்பின் தலைவர் வாஹித் முகமது உள்ளிட்ட நிர்வாகிகள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு உணவு பொருட்களை ஆதரவற்றோர் பராமரிப்பு இல்லங்கள் மற்றும் சமுதாய பகுதிகளுக்கு நேரடியாக சென்று வழங்கினார்கள்.
- தினமலர் வாசகர் நூருல் தௌஃபீக்
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.