கென்யா மும்பாஸாவில் உள்ள மும்பாஸா தமிழ் சங்கம், தலைவர் குமரகுரு தலைமையில் சங்க உறுப்பினர்களுடன் ஒன்று கூடி தமிழ் புத்தாண்டு சுபகிருது வருட சித்திரை திருநாளை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
அங்குள்ள ஷயோன அரங்கத்தில் சனிக்கிழமை மாலை 09.04.2022 அன்று ஒன்றுகூடி புத்தாண்டு கொண்டாட்டங்களை மிகச் சிறப்பாக செய்தனர். தமிழ்த் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. விழாவில் உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவை மேலும் சிறப்பித்தனர்.
புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட தலைவர் வின்சன்ட், தீபா குமரகுரு, கௌரி சங்கர், சுப்ரமணியன், நரசிம்ஹன், பரமேசுவரன், ராஜன்,கிருபா, சாந்தி, திவ்யா ஆனந்த் ஆகியோர் கௌரவிக்கப்பட்டார்கள். புதிய தலைவர் வின்சன்ட் அனைவருக்கும் நன்றி கூறி தென்னிந்திய விருந்து படைத்து இந்த நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
- தினமலர் வாசகி திவ்யா ஆனந்த்
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.