நைஜீரியாவில் சுபகிருது தமிழ் ஆண்டு மங்கள ஸ்வாகதம் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

நைஜீரியாவில் சுபகிருது தமிழ் ஆண்டு மங்கள ஸ்வாகதம்

ஏப்ரல் 18,2022 

Comments

லேகோஸ், நைஜீரியா: ஏப்ரல் 14ம் தேதி, விழாயன் அன்று அதிகாலையில் குரு பகவான் இடப்பெயர்ச்சியை தொடர்ந்து சிறப்பு சாந்தி மற்றும் பரிகார ஹோமம் நைஜீரியா, லேகோஸ் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்தது. சுமார் இரண்டு மணிநேரம் நடந்த இந்த சிறப்பு வழிபாடு சுமார் 8 மணி அளவில் நவக்கிரக குருவிற்கு சிறப்பு தீபாராதனையுடன் முடிந்தது.

இதனை தொடர்ந்து மறுபடியும் சுபகிருது ஆண்டின் சிறப்பு வழிபாடு துவங்கியது. முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை என்று 10 மணிக்கு துவங்கிய பூஜை 12 மணி ஆரத்தியுடன் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து நைவேத்தியம் செய்யப்பட்ட தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், சக்கரைப்பொங்கல் மற்றும் சுண்டல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

அன்று பிரதோஷம் என்பதால் மாலை 4 30 மணிக்கு வழக்கம்போல் பிரதோஷ கால வழிபாடும் தொடர்ந்தது. காலை முதல் மாலை வரை அனைத்து சிறப்பு வழிபாடுகளையும் மிகவும் சிரத்தையுடன் நடத்தி வைத்த சிவகுமார் சிவாச்சாரியாருக்கு கோவில் நிர்வாகமும், பக்தர்களும் தங்கள் பாராட்டுக்களுடன் கலந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

- நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்




Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us