உகாண்டா தலைநகர் கம்பாவில் இறைவனின் பேரருளால் உகாண்டா வாழ் தமிழ் இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதம் முப்பது நோன்பைம் நிறைவு செய்து 02.05.2022 திங்களன்று ஈதுல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாளை குதூகலமாக கொண்டாடினார்கள். உகாசேவா சார்பாக இந்தியன் அசோசியேசன் வளாகத்தில் ஈத் பெருநாள் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உகாண்டா வாழ் தமிழ் இஸ்லாமிய சகோதரர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று கிட்டத்தட்ட 900 பேர் கலந்து கொண்டார்கள்.
காலை 7.00 மணி முதலே மக்கள் வரத் தொடங்கினர். அவரவர் இருக்கைகளில் அமர்ந்து இறைவனைப் புகழ்ந்து தக்பீர் முழக்கங்களை எழுப்பினார்கள். காலை 8.00 மணிக்கு முன்னாள் தலைவர் ரஹ்மத்துல்லா பெருநாள் தொழுகை (இமாமத்) தலைமை ஏற்று நடத்தினார். பிரபலமான சொற்பொழிவாளர் ஷேக் அலி குத்பா உரையாற்றினார். அவர் தனது உரையில் ரமலான் நோன்பின் மகிமையையும், அதன் சிறப்புகளையும், அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகளையும் எடுத்து கூறினார். மேலும் கொரோனா காலத்தில் ஏற்பட்ட கஷ்ட நஷ்ட இழப்புகளை கோடிட்டு காட்டி எல்லாவற்றையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே என்றும், அவற்றை நாம் பொறுமையோடு ஏற்று கொள்ள வேண்டும் என்று அழகாக உரையாற்றினார்.
உகாசேவா தலைவர் வாகீத் முகமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார் . அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று உகாசேவா செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர். தொழுகை முடிந்து ஒருவரையொருவர் கட்டித் தழுவி கரங்களை குலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இறுதியில் தேநீர் மற்றும் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது.
- தினமலர் வாசகர் நூருல் தவ்ஃபீக்
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.