சிங்கப்பூரில் தமிழ்மொழி விழா நிறைவு கோலாகலம் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

சிங்கப்பூரில் தமிழ்மொழி விழா நிறைவு கோலாகலம்

மே 08,2022 

Comments

“ தமிழை நேசிப்போம் – தமிழில் பேசுவோம் “ எனத் தெருவெலாம் முழங்கிய தமிழ்மொழி விழா மே திங்கள் முதல் நாள் சிங்கப்பூர் சிவில் சர்விஸ் கிளப் அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. சிங்கப்பூர்த் தமிழ்க் கவிஞர் இயக்கமான கவிமாலை அமைப்பு வழக்கம் போல இவ்வாண்டும் நிறைவு விழாவை அரங்கம் நிறைந்த சுவைஞர்களைக் கொண்டு நடத்திப் பெருமை பெற்றது.

தமிழ்ச் சான்றோர் கணையாழி விருது – இளங்கவிஞர் தங்க முத்திரை விருது – தொடக்கப் பள்ளி மாணவர் கவிதை சொல்லும் போட்டி – உயர்நிலைப் பள்ளி மாணவர் கவிதைப் போட்டி – கவிதை மொழி பெயர்ப்புப் போட்டி – பொதுப் பிரிவு கவிதைப் போட்டி – கவிதை நாடகம் – கவி மணமும் இசை மணமும் எனப் பல்சுவை கமழ பார்வையாளர்களின் கரவொலி அரங்கமே அதிர மிகச் சிறப்பாக விழா நடைபெற்றது.

வளர் தமிழ் இயக்கத் தலைவர் சு.மனோகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கவிமாலை விதைகள் மாணவரணியின் “ ஆர்க்கிட் பூங்கா “ கவிதை நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கவிஞர் கோ. இளங்கோ எழுதி வடிவமைக்க மாணவரணியின் சரண்யா – முசிலா – விஷ்ணு வர்த்தினி – ரகுநந்தன் – ஸ்ரீராம் – பிரபவ் – ஸ்வேதா ஆகியோர் கம்பராக – பாரதியாக – இளங்கோ அடிகளாக – கண்ணதாசனாக – திருவள்ளுவராக வேடமணிந்து பார்வையாளர்களைத் தமது நடிப்பால் கவர்ந்திழுத்தனர்.

கவிஞர் இளங்கோவின் கவிதை நயம் பாராட்டுக்குரியது. முனைவர் உஷா – லலிதா – வெண்ணிலா – சங்கீதா – அஷ்ரஃப் அலி ஆகியோரின் ஒருங்கிணைப்பு நாடகத்திற்கு மெருகூட்டியது. கவிமணமும் இசை மணமும் எனும் அங்கத்தை ஒலி 96.8 – இன் முகமது ரஃபி – முனைவர் ஜெயராஜதாஸ் பாண்டியன் – அனுபமா முரளி – சூப்பர் சிங்கர் புகழ் சூர்யா மற்றும் அலீஸ் ஆகியோர் பங்கேற்று அசத்தினர். இந்த ஆண்டுக்கான தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான கவிதைப் போட்டி – உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கவிதைப் போட்டி – பொதுப் பிரிவுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு என மொத்தம் ஐயாயிரம் வெள்ளி ரொக்கத் தொகைப் பரிசு வழங்கப்பட்டது.

முத்தாய்ப்பு நிகழ்வாக – பல்லாண்டுகளாகத் தமிழ்ச் சமூகத்திற்குச் சேவையாற்றி வருபவரும் – தமிழ்ப் பட்டயக் கல்வியைச் சிங்கப்பூரில் நிறுவக் காரணமாக விளங்கியவருமான தமிழறிஞர் சாமிக் கண்ணுவுக்கு பலத்த கரவொலிக்கிடையே கணையாழி விருதளித்து கவுரவிக்கப்பட்டது. இவ்வாண்டுக்கான இளங்கவிஞருக்கான தங்க முத்திரை விருதினை இரா.அருள்ராஜ் பெற்றார்.

தமிழ்மொழி விழாவின் போது நாள்தோறும் “ தொட்டணைத்தூறும் “ காணொளித் தொடரில் பங்கேற்றோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தளித்து மகிழ்ந்தனர். நிகழ்வினை கவிஞர்கள் அஷ்ரஃப் அலி மற்றும் ஜோஸப் சுவைபட நெறிப்படுத்தினர். ஆதரவு வழங்கிய வளர் தமிழ் இயக்கம் தமிழ் கற்றல் வளர்ச்சிக் குழு - தமிழ் முரசு நாளிதழ் – ஒலி 96.8. மற்றும் தினமலர் – நிதி வழங்கியோர் முதலியோருக்கு முனைவர் உஷா நன்றி நவில விழா இனிதே நிறைவு கண்டது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்


Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூலை 3, ஷார்ஜாவில் தமிழ் கவிதை நூல் வெளியீடு

ஜூலை 3, ஷார்ஜாவில் தமிழ் கவிதை நூல் வெளியீடு...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us