சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு மே 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் ஸ்ரீ அஷ்டலட்சுமி மஹா யாகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வையத்தைப் பாலிக்கும் லோக மாதாவான ஸ்ரீ மகாலட்சுமித் தாயாருக்கு யாகமும் புனித யாகத்தில் வைத்துப் பூஜிக்கப்பட்ட கலசாபிஷேகத் திருமஞ்சனமும் கோலாகலமாக நடைபெற்றன. சகல வித சௌபாக்கியங்களும் ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெற்று பிணியற்ற வையகம் உருவாக லோக மாதாவை பக்தப் பெருமக்கள் மனமுருகிப் பிரார்த்தித்தனர்.
தலைமை அர்ச்சகர் வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் யாகத்தின் முக்கியத்துவத்தையும் மகத்துவத்தையும் விரிவாக எடுத்துரைத்தார். நிறைவாக பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஆலய மேலாண்மைக் குழுவினர் ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.