'அன்றும் இன்றும் என்றும்'- தமிழ் கலாச்சார கழக 30ஆவது ஆண்டுவிழா | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

'அன்றும் இன்றும் என்றும்'- தமிழ் கலாச்சார கழக 30ஆவது ஆண்டுவிழா

மே 11,2022 

Comments

கான்பெர்ரா: ஆஸ்திரேலிய தமிழ்க் கலாச்சார கழகத்தின் 30ஆவது ஆண்டுவிழா, 'அன்றும் இன்றும் என்றும்' நிகழ்வாக கான்பெர்ரா மெல்ரோஸ் உயர்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.

கான்பெர்ராவின் பல்கலாச்சார சமுதாயத்திற்கு ஆஸ்திரேலிய தமிழ்க் கலாச்சார கழகத்தின் 30 ஆண்டு கால பங்களிப்பை இந்த நிகழ்வு புலப்படுத்தியது. இந்த கழகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, தமிழ் மொழி, பாரம்பரியம் மற்றும் கலாச்சார மதிப்புகளைப் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தி வருகிறது.

கோவிட் பாதிப்புக்கு முந்தைய நிலைக்குத் திரும்புவதைக் குறிக்கும் வகையிலும், சமுதாய மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து உறவாட ஒரு சந்தர்ப்பமாகவும் ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வாக இது அமைந்தது. 275 க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

தமிழ்க் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் 18 நிகழ்ச்சிகளை, 65 பேர் நிகழ்த்தினர். தமிழ்ப்பெண்கள் குத்துவிளக்கேற்ற நிகழ்வுகள் தொடங்கின.

தமிழ்த்தாய் வாழ்த்து அனைவராலும் பாடப்பட்டது. ஷ்ராவண் மதன்ராஜ் முழுப்பாடலையும் பாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சென்னைத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கள் தமிழ்ப் புலமையை வெளிப்படுத்தினர்.

தமிழ்ப் புத்தாண்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு அலங்கார வண்டியை மந்திர் இசைப்பள்ளி உருவாக்கி இருந்தது. பரத நாட்டியம், குச்சிப்படி நடனம், பல்வேறு நடனங்கள், பாடல்கள் இடம் பெற்றன. நிறைவாக புராஜக்ட் ஒன் குழுவினரின் பிரேக் டான்ஸ் நடைபெற்றது.

இந்த கழகத்தின் 6 இளைஞர்கள் பாரம்பரிய உடையில் வந்து ஆங்கிலம் மற்றும் தமிழில் பேசினர். கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளின் படத் தொகுப்பு காட்டபபட்டது.

இந்திய துணைத்தூதர் சுனீத் மேத்தா பேசுகையில், ஆஸ்திரேலிய பொருளாதாரம் மற்றும் சமுதாயத்திற்கு தமிழ்ச் சமுதாயம் அரிய பங்காற்றியுள்ளதை ஆஸ்திரேலியர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இன்றைய நிகழ்வு தென் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. ஆஸ்திரேலிய பல்கலாச்சார உணர்வுகளை வெளிப்படுத்துவதாக தமிழ்க் கலாச்சாரம் அமைந்துள்ளது என்றார்.

டேவிட் ஸ்மித் எம்.பி., பேசுகையில், இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான சிறந்த உறவு மற்றும் தமிழ்ச் சமுதாயத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு குறித்து குறிப்பிட்டார்.

செனட் உறுப்பினர் மேடி நார்தம் நிகழ்ச்சியை பாராட்டி ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய தலைநகர் பகுதி பல்கலாச்சாரத் துறை அமைச்சர் சூஸன் ஓர் பேசுகையில், இந்த நிகழ்வு ஆஸ்திரேலியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான சிறப்பான உறவைப் பிரதிபலிக்கிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான பிணைப்பை ஒன்றாக சேர்ந்து கொண்டாட ஏற்பாடு செய்தவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.

அன்னையர் தின வாழ்த்துக்களுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

- நமது செய்தியாளர் கோவிந்த் ராஜ்



Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us