தமிழ் சங்கம் உகாண்டா மற்றும் உகாண்டா நாட்டிற்குரிய இந்தியா தூதரகம் இணைந்து நடத்திய தமிழ்நாடு நாள் மற்றும் புத்தாண்டு நிகழ்ச்சி உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெற்றது . நிகழ்ச்சியில் உகாண்டா நாட்டிற்கான இந்தியா தூதர் அஜய்குமார் கலந்து கொண்டு கல்வி , விளையாட்டு போன்ற துறைகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
அதனை தொடர்ந்து தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது . தமிழ்நாட்டின் கலாச்சாரம் வீடியோ வடிவில் ஒளிபரப்பப்பட்டது . நிகழ்ச்சியில் உகாண்டாவில் உள்ள தமிழர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . நிகழ்ச்சியினை உகாண்டா தமிழ் சங்க தலைவர் காதிரி , பொது செயலாளர் ராஃபி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.