துபாய் வந்த குவைத் தமிழக பிரமுகருக்கு வரவேற்பு | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

துபாய் வந்த குவைத் தமிழக பிரமுகருக்கு வரவேற்பு

மே 12,2022 

Comments

துபாய் : துபாய் நகருக்கு குவைத் நாட்டின் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் என். அமீர் அஹமது வருகை புரிந்தார். அவருக்கு அமீரக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் அதன் புதிய தலைவர் பூதமங்கலம் அல்ஹாஜ் ஜியாவுதீன் மற்றும் புதிய பொதுச்செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். மேலும் நினைவுப் பரிசும் வழங்கினர்.

அதனையடுத்து அமீரகத்தில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விவரிக்கப்பட்டது.

இதனை கேட்டறிந்த அமீர் அஹ்மது அமீரக சங்கத்தின் சேவைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் மாணவர் சங்கங்கள் ஒருங்கிணைந்து செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

-நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூன் 5 ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் குருமகான் அருளுரை

ஜூன் 5 ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் குருமகான் அருளுரை...

மே 27 முதல் 29 வரை இலங்கையில் மகா சக்தி யோகம்

மே 27 முதல் 29 வரை இலங்கையில் மகா சக்தி யோகம்...

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us