உலக தமிழ் தொழிலதிபர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் பிரதிநிதிகள் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

உலக தமிழ் தொழிலதிபர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் பிரதிநிதிகள்

மே 16,2022 

Comments

“ தி வைரஸ் எழுமின் “ அமைப்பின் ஏற்பாட்டில் லண்டன் மாநகரில் மே திங்கள் 5 – 6 – 7 ஆம் தேதிகளில் எட்டாவது உலகத் தமிழ்த் தொழிலதிபர்கள் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிங்கப்பூரிலிருந்து இருபது நிறுவனங்களைச் சேர்ந்த 25 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சிங்கப்பூரின் பாரம்பரிய உடை அணியும் நாளான மே 6 ஆம் தேதி சிவப்பு வெள்ளை உடையணிந்து அணிவகுத்து வந்து மாநாட்டில் கலந்து கொண்டது அனைவரையும் ஈர்த்தது.

சிங்கப்பூர் “ ஏய்ட் பாயிண்ட் எண்டர்பிரைசஸ் “ அமைப்பின் தலைவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அருமைச்சந்திரன் – தகவல் தொழில் நுட்ப வல்லுநர் கவிஞர் இறைமதியழகன் முதலியோர் கருத்தரங்கில் பங்கேற்று உரை நிகழ்த்தினர். அருமைச்சந்திரன் சிங்கப்பூரில் திரைத் துறையில் முதலீட்டு வாய்ப்புகள் பற்றி விளக்கினார். இறைமதியழகன் அனைத்துலக தகவல் தொழில் நுட்ப ஆலோசனைக் குழுவான “ ஆற்றல் “ என்ற புதிய அமைப்பின் செயல்பாட்டைப் பற்றி விவரித்தார். இக்குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளராகவும் இவர் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தகுந்ததாகும்.

இந்நிகழ்வில் தமிழக தகவல் மற்றும் கணினித் தொழில் துறை அமைச்சர் மனோ.தங்கராஜ் கலந்து கொண்டார். சிங்கப்பூரைத் தவிர கனடா – ஐரோப்பா – ஜாம்பியா – ஜிம்பாவே – நைஜீரியா – மெக்சிகோ – துருக்கி – குர்திஸ்தான் – ஈராக் நாட்டுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். மாநாட்டில் ஆறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன். இத் தீர்மானங்களை ஜகத் கஸ்பர் வடிவமைத்திருந்தார்.

தீர்மானங்கள்

தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவை உலகப் பொது விழாவாக நடத்துவது.

திருக்குறளை அனைத்துலக வாழ்வியல் வழிகாட்டி நூலாக முன்னிறுத்துவது

உலகளாவிய நிலையில் தமிழ் வணிகப் பண்பாட்டு மையங்களை நிறுவுவது

தமிழ் வங்கி – தமிழ் நாணயம் – தமிழ்ப் பணப்பை மென்பொருள் தயாரிப்பது

பாவேந்தர் பிறந்த நாளான ஏப்ரல் 29 ஆம் நாளை அகில உலகத் தமிழ்த் திருநாளாகக் கொண்டாடுவது

என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மலேசியாவைச் சேர்ந்த பிரதிநிதியும் அமைப்பின் துணைத் தலைவருமான சரவணன் சின்னப்பன் வரவேற்புரை ஆற்றினார். ஜகத் கஸ்பர் மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றினார். சிங்கப்பூர் பிரதிநிதிகள் பங்கு அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. தகவல் : இறைமதியழகன்

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்


Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூலை 3, ஷார்ஜாவில் தமிழ் கவிதை நூல் வெளியீடு

ஜூலை 3, ஷார்ஜாவில் தமிழ் கவிதை நூல் வெளியீடு...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us