சர்வதேச அரங்கில் இந்திய நாட்டுப்புற ஓவியக்கலைகள் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

சர்வதேச அரங்கில் இந்திய நாட்டுப்புற ஓவியக்கலைகள்

மே 20,2022 

Comments

 சர்வதேச இந்திய ஓவியக்கலைக்கூடம் (IIFAG - INTERNATIONAL INDIAN FOLK ART GALLERY ) மறைந்து வரும் இந்திய பாரம்பரிய ஓவியக்கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் துவங்கப்பட்ட நிறுவனம். பாரம்பரிய இந்திய ஓவியங்களின் அளவற்ற அழகை சர்வதேச மேடையில் அரங்கேற்றுவதே இந்நிறுவனத்தின் முதன்மைக் குறிக்கோளாகும்.

நிறுவனத்தின் தோற்றுனர் செந்தில் வேல் தம் இளம் வயதில் ஒவியங்களின் மீது கொண்ட காதலால் தஞ்சாவூர் ஓவியங்களை தஞ்சாவூரில் பாரம்பரிய முறையில் கற்றுத் தேர்ந்தவர். தன் ஆர்வ மிகுதியால் பிற மாநில ஓவியங்களையும் சுயமாக கற்றுணர்ந்தார்.

உலகம் முழுவதுமுள்ள கலை ஆர்வலர்களுடன் பயணிப்பதின் ஒரு பகுதியாக கடந்த பிப்ரவரி மாதம் மும்பையில் துவங்கிய பயணம், அடுத்த படியாக ஆஸ்திரேலிய விக்டோரிய மாநிலத்தில் செயிண்ட் கில்டா (St.Kilda)என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்பேஸ்2பி (Space2B)என்ற கலைகூடத்தில் மே 7 2022 அன்று ஒவியக் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கப்பட்டு உள்ளது. துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீனிவாசன் சிதம்பரம் ( குழு உறுப்பினர், பல்கலாச்சார கலைகள் ) கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். இவருடன் இணைந்த கௌரவ விருந்தினர்கள்:

ஜோஷ் பர்ன்ஸ், பாராளுமன்ற உறுப்பினர், Macnarmaதொகுதி

கோலின் ஹர்கின், வேட்பாளர், Macnarma தொகுதி

அனில்குமார் கொலனுகொண்டா, நிறுவனர், ஓம்சாய் சன்ஸ்தான் அறக்கட்டளை

நீரஜ் நந்தா, ஆசிரியர்,  South Asia Times 

அனிதா, SBS (ஹிந்தி)

ஜேனைன் லேரி, பங்குதாரர், Space2B

துவக்க விழாவில் பூர்ணிமா பத்மநாபன் வரவேற்புரையாற்றினார். ஆஸ்திரேலிய மண்ணின் முனனோர்களை நினைவு கூர்ந்து நன்றியுரைத்தார். இவரைத் தொடர்ந்து நிறுவனர் செந்தில் வேல் சிறப்புரையாற்றினார்.

அவர் கூறுகையில், இந்திய நாட்டுப்புற ஓவியக்கலைகள் மிகவும் தொன்மையானவை. மூவாயிரம் வருட வரலாற்றைத் தாங்கிவரும் இவை இந்தியர்களின் தனித்தன்மையை எடுத்துரைப்பன. நாட்டுப்புற ஓவியங்கள் வெவ்வேறு மாநிலங்களில் தோன்றியவை. இவை மக்களின் இன கலாச்சாரத்தையும் அங்கு வசிக்கும் பறவை, விலங்குகளையும் அழகுற பிரதிபலிக்கும் விதமாகவே அமைந்திருக்கும். அண்மை காலமாக இந்திய நாட்டுப்புற ஓவியக்கலைகளுக்கு அங்கீகாரமும் ஆதரவும் குறைந்து வருகின்றது. இவற்றை தொன்று தொட்டு கட்டிக்காத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் திறமை வாய்ந்த கலைஞர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகின்றது.பொருளாதார நெருக்கடியால் இக்கலைஞர்கள் பாரம்பரிய ஓவியக்கலைகளை தொடர முடியாமல் தவிக்கும் நிலை உருவாகி வருகின்றது.இதன் காரணமாக இக்கலைகளும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகின்றன. இவற்றை அழிவிலிருந்து சிறிதேனும் மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஒன்றே இந்த கண்காட்சி. மேலும், இந்த ஓவியக்கலைகளுக்கு சர்வதேச அங்கீகாரமும் ஆதரவும் கிடைக்க ஒவியக்கலைஞர்களையும் அவற்றை கற்றுக்கொள்ள விழையும் கலை ஆர்வலர்களையும் ஓருங்கிணைக்கும் முயற்சியாக 'குருகுலம்' என்ற பயிற்சி வகுப்புகளும் இந்நிறுவனத்தில் இடம் பெற்றிருக்கின்றது. மேலும், சர்வதேச ஒவியப் போட்டிகளும் இடம் பெறுகின்றன. இதனால் அனைவரும் பயனடைய வேண்டுமென்று கூறி விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

சிறப்புரையை தொடர்ந்து சிறப்பு மற்றும் கௌரவ விருந்தினர்கள் குத்து விளக்கை ஏற்றி வைத்து விழாவினை சிறப்பித்தனர். பின்னர், இவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

கண்காட்சியில் கோந்த் ஓவியம், பட்டசித்ரா ஓவியம், மதுபாணி ஓவியம், மண்டலா ஓவியம், கேரள மியூரல் ஓவியம் போன்றவை இடம் பெற்றன. நிறுவனர் செந்தில் வேல் இந்த ஓவியங்களின் சிறப்பம்சங்களை பார்வையாளர்களுக்கு எடுத்துரைத்தார். இவற்றில் பயன்படுத்தப்படும் வண்ணங்கள் இயற்கை சாயங்கள் என்றும் இவற்றை வரைந்து முடிக்க பாரம்பரியக் கலைஞர்கள் எடுத்துக்கொள்ளும் நேரத்தையும் எடுத்துரைத்தார். விழாவிற்கு வந்திருந்த மக்கள் அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்களின் அழகில் மெய்மறந்து நின்றனர். பலர் ஒவியங்களை புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

கோந்த் ஓவியம் மற்றும் சில மண்டலா ஓவியங்கள் விற்பனைக்கு முன் பதிவு செய்தது கூடுதல் சிறப்பு. இவ்வாறு துவக்க விழா இனிதே நிறைவுற்றது. இக்கண்காட்சி மே 30, 2022 வரை நடைபெற உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, வரும் ஜூன் மாதம் (இந்தியா) பெங்களூரிலும், ஜூலை/ஆகஸ்ட் மாதத்தில் (அமெரிக்கா) வாஷிங்டனிலும் இதை போன்ற கலைக்கூடம் மற்றும் கண்காட்சிகள் மூலம் அருகி வரும் இந்திய நாட்டுப்புற ஓவியக்கலைகளையம் அதை சார்ந்த கலைஞர்களையும் ஊக்குவிப்பதில் ஒரு சிறு முயற்சியே.

- தினமலர் வாசகர் இளங்கோ கே.ஆர்.




Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூலை 3, ஷார்ஜாவில் தமிழ் கவிதை நூல் வெளியீடு

ஜூலை 3, ஷார்ஜாவில் தமிழ் கவிதை நூல் வெளியீடு...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us