சாக்ரமென்டோ தமிழ் மன்ற தமிழ் புத்தாண்டு கலை நிகழ்ச்சி | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

சாக்ரமென்டோ தமிழ் மன்ற தமிழ் புத்தாண்டு கலை நிகழ்ச்சி

மே 22,2022 

Comments

அமெரிக்கா கலிஃபோர்னியா வில் சாக்ரமென்டோ தமிழ் மன்றம் நடத்தும் தமிழ் புத்தாண்டு கலை நிகழ்ச்சியானது, வருடம்தோறும்தமிழ் பள்ளிகள் மற்றும் தமிழ் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடப்படும் கலைநிகழ்ச்சியாகும். இந்த ஆண்டு முதல் முறையாக தமிழ் புத்தாண்டு இணைவழி இல்லாமல் மே 21 அம்தேதி நேரில் கொண்டாடப்பட்டது. எனவே பாதுகாப்பான முறையில் நடத்தப்பட்டது.

தமிழ் தாய் வாழ்த்தில் தொடங்கி பாடல்கள் , நடனம் , நாடகம் ஆகியவை இடம்பெற்றன. இதில் தமிழ் பயிலும் மாணவர்கள் மற்றும்ஆசிரியர்கள் , தமிழ் கலை ஆர்வம் கொண்டவர்கள் பங்கு பெறுவது வழக்கம். இதில் இரண்டுவகையான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அதாவது தமிழ் இலக்கியம் சார்ந்து இருக்கும் நிகழ்ச்சிமற்றும் தமிழ் திரை இசை சார்ந்த நிகழ்ச்சியாகும்.இந்த நிகழ்ச்சியை வடிவமைப்பது , மாணவர்களுக்கு பயிற்சிஅளிப்பது இவையாவும் தன்னார்வம் உள்ளவர்களால் நடத்தப்படுகிறது.

தமிழ் சமூகம் ஒன்றுபட்டு இருக்க, மற்றவர்களுடன் சகோதர மனப்பான்மையுடன் பழகவழிவகுக்குகிறது. இதில் பிற மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் ஆர்வமுடன் வந்துகலந்துகொள்வதை காணலாம். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே தமிழர் பண்பாடாகும். இதைஒவ்வொருமுறையும் நாம் வலியுறுத்துவது நம் கடமையாகும்.

நம் சிறு வயதில் இவ்வளவு எளிமையாக மேடை ஏறும் வாய்ப்பு நமக்கு கிடைத்தது இல்லை. பள்ளியில் நன்கு பாடல் , ஆடல் , பேச்சு திறன் பெற்றவர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிட்டியது. எனவே இந்த வாய்ப்பை சாக்ரமென்டோ தமிழ் மன்றம் இப்பொழுது குழந்தைகளுக்கு மட்டுமல்லபெரியோர்களுக்கும் அளிக்கிறது.

ஒவ்வொரு பூக்களும் ஒவ்வொரு மணம் வீசுவது போல ஒவ்வொரு குழந்தைகளிடமும் ஒரு அறியதிறமை உண்டு. அதை வெளிக்கொண்டு வரும் விதமாக அமைந்தது இந்த தமிழ் புத்தாண்டு கலை நிகழ்ச்சி கொண்டாட்டம்.

- தினமலர் வாசகி சந்தியா நவீன்


Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூலை 3, ஷார்ஜாவில் தமிழ் கவிதை நூல் வெளியீடு

ஜூலை 3, ஷார்ஜாவில் தமிழ் கவிதை நூல் வெளியீடு...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us