துபாய் : துபாய் அல் பர்சா பகுதியில் மதுரை கவிஞரும், தமிழக அரசின் சுற்றுலாத்துறையின் முன்னாள் அலுவலருமான இரா. இரவி எழுதிய ’தீண்டாதே தீயவை’ என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது.
இந்த விழாவில் சென்னை மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ரவி தமிழ்வாணன் கவிஞர் இரா. இரவி எழுதிய ’தீண்டாதே தீயவை’ என்ற நூலை அறிமுகம் செய்து வெளியிட்டார். அப்போது பேசிய ரவி தமிழ்வாணன், கவிஞர் இரா.இரவி மதுரையைச் சேர்ந்த சிறந் த கவிஞர். எனது இனிய நண்பர். அவரது நூலை துபாயில் வெளியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்த அன்பு நண்பர் முதுவை ஹிதாயத் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
அதனை தொடர்ந்து பேசிய தமிழேந்தல் கவிதா சோலையப்பன் பேசியதாவது, ‘தீண்டாதே தீயவை’ ஹைக்கூ கவிதை நூல் சமூக சிந்தனைக் கருத்துக்களை கொண்டுள்ளது. இந்த நூல் கல்லூரிகளில் பாட நூலாக இடம் பெற செய்ய வேண்டும் என்றார்.
இந்த நிகழ்வில் இலங்கை சேர்ந்த ஊடகவியலாளர் சுபையிர் அஹில் முஹம்மது மௌலவி, சமூக ஆர்வலர் முதுவை ஹிதாயத், விஸ்வநாதன் சோலையப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.