பஹ்ரைனில் தமிழக பிரமுகருக்கு விருது | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

பஹ்ரைனில் தமிழக பிரமுகருக்கு விருது

மே 24,2022 

Comments

மனாமா: பஹ்ரைன் நாட்டிலுள்ள "படவ் குடும்ப சமூகம்" எனும் அமைப்பு, கோவிட் 19 இன் போதும்,தொடர்ந்தும், சிறந்த சமூக சேவையாற்றி வரும், " "லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ்" சமூக உதவி இயக்கத்தின் அமைப்பாளர் தமிழகத்தின் நாகர் கோவிலைச் சேர்ந்த சையத் ஹனீப்பிற்கு "சிறந்த சமூக சேவகர்-2022" விருதை வழங்கியது.

1000 நாட்களுக்கும் மேலாக பஹ்ரைன் நாட்டைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலுமுள்ள குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களுக்கு, இலவசமாக உலர் உணவுகள், சமைத்த உணவுப் பொருட்கள், பழங்கள், தண்ணீர், பழச்சாறு, பிஸ்கட், தொப்பிகள், முகமூடிகள், கையுறைகள், சானிடைசர்கள் மற்றும் பேருந்து பயண அட்டைகள் ஆகியவற்றை, அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் "லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ்" அமைப்பின் முயற்சியில் விநியோகித்தார்.

மார்ச் 2020 இல் தொடங்கப்பட்ட இந்த முயற்சியின் மூலம் இதுவரை 50,000 பேர் பயனடைந்துள்ளனர். பஹ்ரைனில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில், விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சையத் ஹனீப்பிற்கு "படவ் குடும்ப சமூகம்" நிர்வாகிகள், விருதை வழங்கினர்.

-நமது செய்தியாளர் காஹிலா


Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூலை 3, ஷார்ஜாவில் தமிழ் கவிதை நூல் வெளியீடு

ஜூலை 3, ஷார்ஜாவில் தமிழ் கவிதை நூல் வெளியீடு...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us