துபாய் : துபாயில் ஓவியப் போட்டியில் சிறந்து விளங்கும் தமிழக மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
துபாயில் சிவகெங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தஸ்னீம் அபுதாஹிர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் இளம் வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் சிறந்த திறமை கொண்டிருந்தார். அமீரக அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளார். உலக ஒற்றுமையை வலியுறுத்தி வரைந்த ஓவியம் தேர்வு செய்யப்பட்டு சுவிட்சர்லாந்து நாட்டில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பு மிக்க ஓவியருக்கு துபாய் வந்த மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் பாராட்டு தெரிவித்தார். அவர் ஓவியத் திறமையின் மூலம் தமிழர்களுக்கும், தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்க்க வாழ்த்து கூறினார். அப்போது மாணவியின் தந்தை செய்யது அபுதாஹிர், எழுத்தாளர் கோவிந்தராஜு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.