ஆக்லாந்தில் சங்கீத உத்சவம் 2022 | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

ஆக்லாந்தில் சங்கீத உத்சவம் 2022

ஜூன் 08,2022 

Comments

   நியூஸிலாந்து கர்னாடிக் மியூசிக் சொசைட்டியால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா கட்டுப்பாட்டினால் சங்கீத உத்சவம் நடத்த இயலாமல் இருந்தது. இந்த வருடம் கடந்த சனி மற்றும் ஞாயிறு இரண்டு தினங்களிலும் சங்கீத உத்சவத்தை கர்னாடிக் சொசைட்டி ஆக்லாந்தில் உள்ள பிக்ளிங் சென்டரில் மிகச்சிறப்பாக நடத்தியது.

சனியன்று (04/06/2022) காலை 9 மணிக்கு சங்கீத விழாவின் தொடக்கமாக இசை கலைஞர்களால் ஸதகுரு ஸ்ரீ தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடப்பட்டன. . பின்னர் இசைஆசிரியர்கள் மற்றும் இசைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளின் பாட்டு, வயலின் மற்றும் வீணை கச்சேரி நடைபெற்றது.

மாலை 5.30 மணியளவில் சங்கீதவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த டாக்டர் சாருலதா மணியின் கச்சேரி நடைபெற்றது. அவருடன் இணைந்து டாக்டர் அசோக் மல்லூர் வயலினும் மற்றும் ஸ்ரீதர் சாரி மிருதங்கமும் வாசித்து கச்சேரியை சிறப்பித்தார்கள். முதலில் அவர் சாவேரி ராகத்தில் அமைந்த ஸரஸுட என்ற வர்ணத்தோடு கச்சேரியை ஆரம்பித்தார். பின் தீஷிதரின் கணபதி மஹாமதே என்ற கீர்த்தனையை கல்யாணி ராகத்தில் நிரவலுடன் பாடி சிறப்பித்தார். பின்னர் பைரவியை மிக அழகாக ஆலாபனை செய்து ஷ்யாமா சாஸ்திரியின் அம்பா காமாக்ஷி என்ற கீர்த்தனையை மிகச் சிறப்பாக பாடினார். தொடர்ந்து சாருலதா எடுத்துக்கொண்ட ராகங்கள் எல்லாமே மிக சிறப்பானதாகும். பிருந்தாவன சாரங்காவில் தியாகராஜரின் கிருதியும், மாரிமுத்து பிள்ளை இயற்றிய யதுகுலகாம்போதி ராகத்தில் காலை தூக்கி நின்றாடும் தெய்வமே பாடலை பாடி தொடர்ந்து ஹேமாவதி ராகத்தை முதன்மை ராகமாக எடுத்து விஸ்தாரமா ஆலாபனை செய்து தீக்ஷிதரின் ஸ்ரீகாந்திமதிம் கீர்த்தனையை கல்பனா ஸ்வரங்களுடன் சிறப்பாக பாடி முடித்தார். அசோக் மல்லூரின் வயலினும் ஸ்ரீதர் சாரியின் மிருதங்க தனி ஆவர்த்தனமும் மிக அருமையாக இருந்தது. மற்றும் மணிரங்கு ராகத்தில் மாமாவ பட்டாபிராமா,, பெரியசாமி தூரனின் த்வஜாவந்தி ராகத்தில் எங்கே செல்வேன் ஐயா என்ற கீர்த்தனைகளை மிக சிறப்பாக பாடி ரசிகர்களின் கைதட்டலை பெற்றார். பின்னர் சிறந்த கருத்துள்ள விருத்தங்களை சிந்துபைரவியில் பாடி ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்தார். நிகழ்ச்சியின் சிறப்பம்சம் என்னவென்றால் சாருலதா ஒவ்வொரு ராகத்தையும் மிக அழகாக விளக்கியது ரசிகர்களை மிக கவர்ந்தது.

மறுநாள் ஞாயிறன்று (05/06/2022) மாலை ஸ்ரீதர் சாரிchன் புல்லாங்குழல் இசைக்கச்சேரி நடைபெற்றது. அவருடன் இணைந்து அசோக் மல்லூர் வயலின் மற்றும் ராமன் ஈஸ்வரன் மிருதங்கமும் வாசித்தார்கள். ஸ்ரீதர் கோயில் திருவிழாவில் சுவாமி புறப்பாடு சமயம் நாதஸ்வர கலைஞர்களால் வாசிக்கப்படும் மல்லாரியை கம்பீர நாட்டையில் வாசித்தார். அவர் மல்லாரியின் சிறப்பம்சம் பற்றி கூறியது பல இசை ரசிகர்களுக்கு இதுவரை அறியாத ஒன்றாகும், பின்னர் ஆபோகி வர்ணத்தை பாடி தொடர்ந்து தியாகராஜரின் பல கீர்த்தனைகள் முறையே . கல்யாணியில் வாசுதேவயனி, பூர்ணசந்திரிகா ராகத்தில் தெலிசிராமச்சந்திர, பூர்விகல்யாணி ராகத்தில் ஞானமு ஸகராத மற்றும் கானமூர்த்தி ராகத்தில் கானமூர்த்தி கிருதிகளை மிகஅழகாக வாசித்தார். அவர் காம்போதி ராகத்தை முதன்மை ராகமாக எடுத்து ஆலாபனை செய்து தியாகராஜரின் எவரி மாட வின்னவோ என்ற கீர்த்தனையை இசைத்து அதற்கு அசோக் வயலினில் அவரை மிக அழகாக தொடர்ந்து வாசித்து ராமன் ஈஸ்வரன் அவர்கள் தனி ஆவர்த்தனமும் மிகச் சிறப்பாக இசைத்து ரசிகர்களின் கரகோஷத்தை பெற்றனர்.

பின்னர் கிருஷ்ணா நீ பேகனே பாரோ பாடலும், முரளிதர கோபாலா பாடலையும் நன்றாக இசைத்து, பிரபலமான மதுரை மணி ஐயரின் இங்கிலீஷ் நோட்டை இசைத்து தனுஸ்ரீ ராகத்தில் தில்லானாவுடன் மங்களம் இசைத்து முடித்தார். ரசிகர்கள் அனைவரும் நீண்ட நேரம் கரவொலி செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

இசை கலைஞர்களை இரண்டு நாட்களும் நியூஸிலாந்து கர்னாடிக் மியூசிக் சொசைட்டியின் தலைவர் ரவி நாகராஜன் கலைஞர்களை வரவேற்றும் நிகழ்ச்சியை பாராட்டியும் பேசினார்.  ரவி பின்னர் சங்கீதவிழாஅனைவருக்கும் நன்றி கூறினார்.

இந்த வருடமும் அரசின் சில கட்டுப்பாடுகள் இருந்தாலும் ரசிகர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து இரண்டு நாளும் வந்து இசைவிழாவை கண்டு கேட்டு ரசித்தனர். சங்கீத விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் இரண்டு நாட்களும் சிறப்பான உணவு வழங்கப்பட்டது. .

- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்


Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us