பஹ்ரைனில் பல்வேறு சமூக நற்பணிகளைச் செய்துவரும் அன்னை தமிழ் மன்றம், உலக குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு கடந்த 10-06-2022 வெள்ளிக்கிழமை, பஹ்ரைனில் உள்ள கிங் ஹமாத் மருத்துவமனையோடு இணைந்து மாபெரும் இரத்த தான முகாமை நடத்தியது. இந்த முகாமில் சுமார் 100க்கும் அதிகமான குருதிக் கொடையாளர்கள் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கினார்கள்.
இவர்கள் அனைவருக்கும் அன்னை தமிழ் மன்றத்தின் தலைவர் செந்தில் GK, உப தலைவர் அப்துல் பாசித் மற்றும் செயலாளர் தாமரைக்கண்ணன், ஆகியோர் உணவு மற்றும் குளிர்பானங்கள் வழங்கியதோடு இவர்களுக்கு நினைவுப்பரிசும் சான்றிதழும் வழங்கி கௌரவித்தனர். இந்த முகாமை அன்னை தமிழ் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் லலித் தலைமையேற்று நடத்தினார். அன்னை தமிழ் மன்றத்தின் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டு முகாம் சிறப்புற நடைபெற உதவி செய்தனர்.
இறுதியாக தலைவர் செந்தில், கிங் ஹமாத் மருத்துவமனை ஊழியர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இதனையடுத்து 14-06-2022 அன்று கிங் ஹமாத் மருத்துவமனை ஏற்பாடு செய்திருந்த உலக குருதிக் கொடையாளர்கள் தின விழாவில் கிங் ஹமாத் மருத்துவமனையின் இயக்குநர், அன்னை தமிழ் மன்றத்தின் சேவையைப் பாராட்டி நினைவுப்பரிசும் சான்றிதழும் வழங்கிக் கௌரவித்தார். குருதிக்கொடை அளிப்பதில் அன்னை தமிழ் மன்றம் மிகுந்த அக்கறையுடன் செயல்படுவதாக பாராட்டு தெரிவித்தார்.
- நமது செய்தியாளர் பெ. கார்த்திகேயன்
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.