தமிழில் பட்டம் பெற்ற ஜெர்மனி மாணவ, மாணவிகள் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

தமிழில் பட்டம் பெற்ற ஜெர்மனி மாணவ, மாணவிகள்

ஜூன் 22,2022 

Comments

தமிழ்மொழிக் கல்விக்கான கேம்பிறிச் பல்கலைக்கழகம் சர்வதேச உயர்தர கல்விப் பொதுத்தராதர தமிழ்மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஜெர்மனி தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலய மாணவ, மாணவியருக்கு கெசன் மாகாண பார்லிமென்ட் உறுப்பினர் சான்றிதழ்களை வழங்கினார்.

யேர்மனி தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலய நெறியாள்கையில் யேர்மனி பிராங்பேர்ட் வாழ் உள்ளக, வெளியக மாணவச்செல்வங்கள் இணைந்து உன்னதமான தமிழ்மொழிக் கல்விக்கான கேம்பிறிச் பல்கலைக்கழகம் (University Of Cambridge) சர்வதேச உயர்தர கல்விப் பொதுத்தராதர தமிழ்மொழித் தேர்வில்(GCE A/L)ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் நடைபெற்றது.

16.06.2022 வியாழக்கிழமை அன்று மாலை 3:00 மணியளவில் பிராங்பேர்ட் நகரில் வரலாற்றுமிகு பாரம்பரியத்தைக் கொண்டதும் பெருமை வாய்ந்ததுமான றோமர் மாநகரசபை மண்டபத்தில் (800ம் ஆண்டுகளில் இருந்து ரோமானிய பேரசர்களால் ஆண்ட, ஆட்சி முடிவெடுக்கும் அந்த அரசியல் தளமும் இன்றைய ஜனநாக ஆட்சியின் இந்த மையவிடமான Römer அரச மாளிகையில் மந்திரிகள் கூடி வாதாடி முடிவெடுக்கும் அந்த சிறப்புமிக்க அரங்கில் ) இந்த குதூகலமான நிகழ்வு இடம் பெற்றது.

கெசன் மாநில பாராளுமன்ற உறுப்பினர் Yanki Puersuen 2020ல் சித்தியெய்திய மாணவர்களுக்கும், 2021ல் சித்தியெய்திய மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிகு நிகழ்வில் தமிழ்க்கல்விக்கழக பிராங்பேர்ட் தமிழாலய நிர்வாகத்தினர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என அனைவரும் பங்கேற்றனர்.


Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூலை 3, ஷார்ஜாவில் தமிழ் கவிதை நூல் வெளியீடு

ஜூலை 3, ஷார்ஜாவில் தமிழ் கவிதை நூல் வெளியீடு...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us