இறந்தவரின் உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க இந்தியன் சோசியல் ஃபோரம் உதவி | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

இறந்தவரின் உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க இந்தியன் சோசியல் ஃபோரம் உதவி

ஜூன் 23,2022 

Comments

ரியாத் : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவை சேர்த்தவர் "பெரியசாமி ஆறுமுகம்" (62). இவர் அபஹாவில் உள்ள Southern gas என்ற தனியார் கம்பெனியில் 2011 ஆம் ஆண்டிலிருந்து வேலை செய்து வந்தார்.

கடந்த ஜனவரி 27- 2022 அன்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் அவரின் உடலை தயக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு அவர்களுடைய உறவினரிகள் தமிழ் நாட்டில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியை அணுகினார்கள், அதனடிப்படையில் SDPI கட்சி நிர்வாகிகள் இந்தியன் சோசியல் ஃபோரம் ஜித்தா தமிழ் பிரிவு பொறுப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்தியன் சோசியல் ஃபோரத்தினரின் தொடர் முயற்சியாலும், இந்திய தூதரகத்தின் உதவியினாலும் இறந்த பெரியசாமி ஆறுமுகத்தின் உடல் 13-06-2022 அன்று இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், அவருடைய பணிப்பலன் தொகையையும் முழுமையாக பெறுவதற்கு அனைத்து உதவிகளும் செய்து கொடுத்தனர்.

இறந்தவரின் உடலை சென்னை விமான நிலையத்தில் பெற்று ஆம்புலன்ஸ் மூலமாக அவருடைய சொந்த ஊருக்கு கொண்டு சென்று உறவினர்களிடம் ஒப்படைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. SDPI நிர்வாகிகள் உடனிருந்து தேவையான உதவிகளை செய்தனர். அவருடைய குடும்பத்தினர் SDPI கட்சி நிர்வாகிகளுக்கு நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூலை 3, ஷார்ஜாவில் தமிழ் கவிதை நூல் வெளியீடு

ஜூலை 3, ஷார்ஜாவில் தமிழ் கவிதை நூல் வெளியீடு...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us