இவ்வருட (2022) ஹஜ் செய்வதற்காக சவுதி அரேபியாவிற்கு வரும் மக்களில் தேவைப்படுவோருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் மற்றும் கிங் அப்துல் அஜீஸ் ஜித்தா சவூதி அரேபியா மருத்துவமனை இணைந்து நடத்திய 25-வது இரத்ததான முகாம் 24.6.2022 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. முகாமில் 98 நபர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களில் 72 நபர்களிடமிருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டது. முகாமில் ரத்த தானம் செய்தவர்கள் பெரும்பான்மையினர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இருப்பினும் இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்று நாட்டவர்களும் கலந்து கொண்டு குருதிக் கொடை அளித்தனர். இந்த முகாமில் பெண்களும் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் ஜித்தாவை சேர்ந்த பிற தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு குருதிக்கொடை அளித்தனர். இந்த முகாம் பற்றி பேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டல தலைவர் முஹம்மது முனாஃப், இது போன்ற முகாம்களை நாங்கள் நடத்துவது வழக்கம். இவ்வருட ஹஜ் செய்வதற்காக உலகின் பல பகுதியிலிருந்து சவுதி அரேபியாவிற்கு வரும் மக்களில் தேவைப்படுவோருக்கு இந்த ரத்ததான முகாமை ஏற்பாடு செய்தோம் என்றார்.
ஜித்தா தமிழ்ச் சங்கம் பொறியாளர் காஜா மொஹிதீன் கூறுகையில், இரத்த தானம் செய்வதால் பலன் பெறுவது மற்றவர் மட்டுமல்ல... நாமும்தான். உடலில் இயற்கையாக புதிய ரத்தம் உற்பத்தியாகும். டாக்டர். ஐமன் அவர்களின் மேற்பார்வையில் கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் ரத்த வங்கி குழுவினர் சிறப்பான ஏற்பாடு செய்திருந்தனர்.
- தினமலர் வாசகர் எம் .சிராஜ்
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.