துபாயில் நடந்த தீனிசைப் பாடல்கள் இசை நிகழ்ச்சி | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

துபாயில் நடந்த தீனிசைப் பாடல்கள் இசை நிகழ்ச்சி

ஜூன் 27,2022 

Comments

துபாய் : துபாயில் தீனிசைப் பாடல்கள் நிகழ்ச்சி துபாய் தேரா நாசர் ஸ்கொயர் லேண்ட்மார்க் ஹோட்டலில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முஹிப்புல் உலமா கீழை ஏ. முஹம்மது மஃஹ்ரூப் தலைமை வகித்தார். ஜலால் இறைவசனங்களை ஓதினார். ஈமான் சங்க தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் முன்னிலை வகித்தார். கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவன தலைவர் முனைவர் ஆ. முகம்மது முகைதீன் பாடகர் நாகூர் இ.எம். ஹனிபா நௌசாத் அலி குறித்த அறிமுக உரையினை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நாகூர் இ.எம். ஹனிபா நௌசாத் அலி, மறைந்த பாடகரும், அவரது தந்தையுமான நாகூர் இ.எம். ஹனிபா பாடிய தீனிசைப் பாடல்களை பாடினார். கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டு ஆண்டுகளாக இத்தகைய பாடல் நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த நிகழ்ச்சி நடந்தது பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

மேலும் சமூக ஆர்வலர் கீழை ஏ. முகம்மது மக்ரூப் தனது பள்ளிக்கூட தோழர் நாகூர் இ.எம். ஹனிபா நவுசாத் அலியுடன் இணைந்து 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இணைந்து ‘ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்’ என்ற பாடலை பாடியது மலரும் நினைவாக அமைந்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் கேரளாவைச் சேர்ந்த இஸ்மாயில் மேலடி ஆங்கிலத்தில் எழுதில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘பாலைவன மணற்துகள்கள்’ என்ற நூல் அறிமுகம் செய்யப்பட்டது.

பாடகருக்கு கோவிந்தகுடி முஹம்மது இஸ்மாயில் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இந்த நூலை ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் அறிமுகம் செய்தார். இளையான்குடி அபுதாஹிர், கீழக்கரை சலீம் காக்கா, கோவிந்தகுடி முஹம்மது இஸ்லாமியில் சர்வதேச வர்த்தக குழுமத்தின் அன்வர்,ஷாநவாஸ், ராஜா, இலங்கை மௌலவி சுபையிர் அஹில் முஹம்மது, அல் அய்ன் இப்ராஹிம், காயல்பட்டணம் அஹமது சுலைமான், வழுத்தூர் மொஹிதீன் பாட்சா உள்ளிட்டோர் அந்த நூலை பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் லேண்ட்மார்க் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் சாதிக் காக்கா, கோவிந்தகுடி சேட், அதிரை அப்துல்லா ஹஜ்ரத், அதிரை ஷேக் தாவூத் ஹஜ்ரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா


Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us