மலேசியாவில் சர்வதேச யோகா தின விழா | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

மலேசியாவில் சர்வதேச யோகா தின விழா

ஜூன் 28,2022 

Comments

மலேசியா உலக சமாதன ஆலயம் – திருமூர்த்தி மலை தத்துவ தவ ஞான பீடாதிபதி ஜெகத்குரு மகா மகரிஷி குருமகான் பரஞ்ஜோதியார் நல்லருளாசியுடன் – மலேசியத் துணைத் தூதரக ஆதரவோடு சர்வ தேச யோகா தின விழாவை ஜீன் 26 ஆம் தேதி சிரம்பான் பாலம் மால் பேரங்காடி வளாகத்தில் சுமார் 300 பேர் கலந்து கொண்ட நிகழ்வாக மிகச் சிறப்பாக நடத்தியது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் துணைத் தூதரக ஆதரவுடன் இவ்விழா நடைபெற்று வருவது குறிப்பிடத் தகுந்ததாகும்.

இந்தியத் தூதரக இரண்டாம் செயலாளர் தேவேந்தர் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். நெகிரி செம்பிலான் துணை சபாநாயகர் இரவி.முனுசாமி – நெகிரி செம்பிலான் ம.இ.கா. தொடர்புத் துறை அதிகாரி எஸ்.கே.சேகர் – தொழிலதிபர் டத்தோ இளஞ்செல்வன் – புரோடெக் பேப்பர் குரூப் நிர்வாக இயக்குநர் ரவீந்திரன் சுப்பையா – ராகவேந்திர ஆசிரம நிர்வாகி சிவஸ்ரீ கோபி குருக்கள் – சிரம்பான் பிரம்ம குமாரி இயக்கத்தின் மகேஸ்வரி கேசவன் – மற்றும் மலாய் – சீன முதலிய யோகா பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

விழாவுக்கு நல்லருளாசி வழங்கிய மகரிஷி மலேசியா நாட்டு மெய்யுணர்வாளர்களை வாழ்த்தியதுடன் பாரதப் பிரதமர் யோகாவை உலகளாவிய நிலையில் கொண்டு சென்றுள்ளதை மலேசியப் பிரமுகர்களும் பாராட்டியதற்குத் தமது மகிழ்வைத் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் துணை சபாநாயகர் இந்நிகழ்வை அதிகார பூர்வமாகத் தொடக்கி வைத்தார். தமது மாநிலத்தில் நடைபெறுவதைப் பெருமையாகக் கருதுவதாக அவர் தாது உரையில் குறிப்பிட்டார். மல்லிகா லட்சுமணன் வழிகாட்டுதலில் யோகாசனப் பயிற்சிகள் நடைபெற்றன. ஆலய ஆலோசகரும் மேனாள் தேசயத் தலைவருமான டாக்டர் சரசிஜெம் நாயர் சிறப்புரை ஆற்றினார். ராமன் சிரிப்புப் பயிற்சியை சிறப்புற நடத்தினார். மலேசிய உலக சமாதான ஆலய தேசியத் தலைவர் சந்திரன் வீரமுத்து நன்றியுரை ஆற்ற நிகழ்வு நிறைவு கண்டது.

- தினமலர் வாசகர் தமிழ்க்கோ


Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us