அமெரிக்காவில் தமிழர் கலை விழா | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

அமெரிக்காவில் தமிழர் கலை விழா

ஜூன் 30,2022 

Comments

அமெரிக்கா – வாஷிங்டன் மாநிலம் கிர்க்லேண்ட் ( சீட்டல் ) நகரில் ஸ்டார் கலைக்குழுவினரின் தமிழர் கலை விழா கோலாகலமாக நடைபெற்றது. தமிழர்தம் பாரம்பரியக் கலையை மீட்டெடுக்கவும் அமெரிக்க மண்ணில் பிரபலப்படுத்தவும் ஸ்டார் கலைக்குழு இரண்டாவது ஆண்டாகப் பன்முக – பல்கலை நிகழ்ச்சிகளை நடத்தித் தமிழர்களையும் அமெரிக்கர்களையும் பிரமிக்க வைத்தது.

ஸ்டார் கலைக்குழுவினர் தமிழினத்தின் பாரம்பரியக் கலைகளான பறை – ஒயிலாட்டம் – சிலம்பாட்டம் – காவடியாட்டம் – மாடாட்டம் – மயிலாட்டம் – கரகாட்டம் – சதிராட்டம் – வில்லுப் பாட்டு எனப் பல மணி நேரம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர். ஒவ்வொரு நிகழ்ச்சியின் போது அதன் கலையம்சம்- சிறப்புக்கள் பற்றி விளக்கியமை பார்வையாளரை வெகுவாக ஈர்த்தது. இக்கலைகளை எவ்வாறு போற்றிப் பாதுகாக்க வேண்டுமென நடைபெற்ற குறுநாடகம் சிறப்பாக அமைந்தது. இந்நகரில் வாழும் இந்தியர்களே பங்கு பெற்றது பாராட்டைப் பெற்றது. மேலும் அமெரிக்க மண்ணில் காண இயலாத பெட்டிக் கடை ஒன்றை அமைத்து அதில் தேன் மிட்டாய் – கமர்க்கட்டு – இலந்தை வடை – இஞ்சி மரப்பான் – பொரி உருண்டை எனத் தயாரித்தளித்தது பார்வையாளர்களுக்குப் பெரு விருந்தாய் அமைந்தது. முப்பது வகைத் திண்பண்டங்கள் எல்லோரையும் மகிழ்வில் ஆழ்த்தி நெகிழ வைத்தது. நமது மரபுக் கலைகளை வெளிப்படுத்தும் நோக்கில் ஓவியக் கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது.

மங்கல மகளிர் குத்து விளக்கேற்றி ஒளி வழிபாடு செய்ய தமிழ்வாழ்த்துடன் விழா தொடங்கியது. ஸ்டார் கலைக்குழுத் தலைவர் ஜெயக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். பாரம்பரியக் கலைகளை ரசித்தும் பண்டங்களை ருசித்தும் மகிழ்ந்த பார்வையாளர்கள் இன்னொரு முறை இது போன்றதொரு கலை விழா நடைபெறாதா என்ற ஏக்கத்தோடு விடைபெற்றனர்.

- தினமலர் வாசகர் தமிழ்க்கோ


Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us