மனாமா: லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ்(சமூக உதவி இயக்கம்), அல் ஹிலால் மல்டி ஸ்பெஷாலிட்டி மெடிக்கல் சென்டர்-மனாமாவுடன் இணைந்து இலவச மருத்துவ பரிசோதனையை நடத்தி, தேசிய மருத்துவர்கள் தினத்தையும் கொண்டாடியது. அவர்களின் சமூகப் பணிகளின் தொடராக நடைபெற்ற இந் நிகழ்வில் 250 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அபுல் யதீம் 'அனாதைகளின் தந்தை' என்று பரவலாக அறியப்படும் கலீல் அல் தைலாமி தலைமை விருந்தினராகவும், கேன்சர் கேர் குழுமத்தின் தலைவர் டாக்டர் பி வி செரியன் இந்த நிகழ்ச்சியின் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது இவ்வமைப்பின் செயல்பாடுகளுக்கு ஆதரவளித்தும், சமூகங்களுக்கு சேவையாற்றியவர்களுக்கான பாராட்டு விருதுகள் வழங்கப்பட்டது.
கலீல் அல் தைலாமி, டாக்டர் பி வி செரியன், மூசக்குட்டி ஹாஜி, அலி அல் தைலாமி, ஆதம் இப்ராஹீம், ராஜீவன் சி கே, மணிகுட்டன் ஜி, ராஜி உன்னிகிருஷ்ணன் மற்றும் அல் ஹிலால் மல்டி ஸ்பெஷாலிட்டி மெடிக்கல் சென்டர்-மனாமா கிளைக்கும் விருதுகள் வழஙகப்பட்டது.லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ்(சமூக உதவி இயக்கம்) நிறுவனர்.செய்யது ஹனீஃப் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.