திருகோணமலை றோட்டரிக் கழக 44 ஆவது தலைவர் பதவியேற்பு நிகழ்வு | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

திருகோணமலை றோட்டரிக் கழக 44 ஆவது தலைவர் பதவியேற்பு நிகழ்வு

ஜூலை 04,2022 

Comments

திருகோணமலை ரோட்டரி கழகத்தின் 44 ஆவது தலைவராக நா. கிட்டினதாஸ் பதவி ஏற்க்கும் நிகழ்வு டைக் வீதியில் உள்ள றோட்டரி அலுவலகத்தில் இடம் பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக சி ஸ்ரீதரன் (திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர்) கலந்து கொண்டார். இவர்களுடன் ரோட்டரி மாவடட செயலாளர் (பொது) குமார் சுந்தரராஜா மற்றும் ரோட்டரி உதவி ஆளுநர் ராவண விஜயரட்ன ஆகியோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

இவ் வைபவத்தில் திருகோணமலை ரொட்டறி கழக தலைவர் த. அகிலன் , கழகம் சார்பில் வரவேற்பு உரை நிகழ்த்தினார். அவரது காலத்தில், திருகோணமலை ரோட்டரி கிளப் சிறப்பாக செயல் பட்டதாகவும் அதட்கு உதவிய தனது குழு உறுப்பினர்களுக்கு நன்றி கூறி கௌரவித்தார். செயலாளர் க பிரபாகரன் 2021 - 2022 ஆண்டில் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைகள் பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை கொடுத்தார்.

இவ் நிகழ்ச்சியில் திருகோணமலை கப்பல்துறை வித்யாலயத்துக்கு ஒரு கணினித் தொகுதியும் கொப்பிகளும் கையளிக்கப் பட்ட்து.. அது போல் தம்பலகாமம் மகா வித்யாலயத்துக்கு கொப்பிகளும் கையளிக்கப் பட்டது. இதன்போது கடந்த ஆண்டின் தலைவர் த. அகிலன் புதிதாக தெரிவான தலைவர் நா.கிட்டினதாஸ்க்கு தலமைப்பதவியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

பிரதம விருந்தினர் திரு சி ஸ்ரீதரன் அவரது உரையில் றோட்டரிக் கழகம் இன்னலுற்ற மக்கள் மத்தியில் சிறந்த சேவை புரிவதாக பாராட்டினார். மற்றும் திருகோணமலை மாவடட கல்வி நிலைமை வீழ்ச்சியுற்றுப்பதை எடுத்துக் கூறி, அதை நல்ல முறையில் சீர் படுத்துவதட்கு றோட்டரிக் கழக உறுப்பினர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் இணைந்து முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அடுத்த தலைவராக தெரிவு செய்யப்படட மருத்துவர் ச சௌந்தரராஜன் நன்றியுரையை நிகழ்த்தினார்.

- நமது செய்தியாளர் ஞானகுணாளன்


Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us