வெலிங்டனில் ஸ்ரீநிவாசஸ்வாமி கல்யாண மஹோத்ஸவம் 2022 | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

வெலிங்டனில் ஸ்ரீநிவாசஸ்வாமி கல்யாண மஹோத்ஸவம் 2022

ஜூலை 14,2022 

Comments

ஸ்ரீனிவாசஸ்வாமி கல்யாண மஹோத்ஸவம்) என்பது நியூசிலாந்தின் சனாதன தர்ம பரிபாலன சேவா டிரஸ்ட்மூலம் 2019 முதல் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். வெலிங்டன் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோயிலின் முதன்மை நிகழ்வாகும். லோக க்ஷேமார்தம் தர்மப் பிரச்சாரம் என்ற முக்கிய நோக்கத்துடன் கல்யாணம் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி நியூசிலாந்து, கிரேட்டர் வெலிங்டன் பகுதியில் உள்ள பெரிய பக்தர் சமூகத்தினரால் நடத்தப்படும் ஒன்றாகும்.

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி/பிப்ரவரி மாதங்களில் நடைபெறும், ஆனால் கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு மீண்டும் திட்டமிடப்பட்டு ஜூன் 25 அன்று வெலிங்டனில் உள்ள பிடோனே அரங்கில் நடை பெற்றது. . இந்நிகழ்ச்சி சங்கத்தின் முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மற்றும் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேரில் கலந்து கொண்டனர். . கடந்த காலங்களில், பாமர்ஸ்டன் நார்த், ஹாக்ஸ்பே போன்ற அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும் இந்த நிகழ்வை நேரில் கண்டு அனுபவிக்கும் வாய்ப்பைப் பெ ற்றுனர்.

இந்நிகழ்ச்சி பத்மாவதி தேவியுடன் ஸ்ரீ வெங்கடேஸ்வராவின் (ஸ்ரீனிவாசா என்றும் அழைக்கப்படும்) திருமணத்தை கொண்டாடியது. ஸ்ரீனிவாசஸ்வாமி கல்யாண மஹோத்ஸவம் என்பது வைதீக மற்றும் லௌகீக நடை முறைகளுடன் கூடிய ஒரு தனித்துவமான மற்றும் சிறப்பு வாய்ந்த வைபவம் ஆகும், பக்தர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கி இறைவனுக்குத் திருமணத்தை பாட்டு மற்றும் நடனம் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பக்தியுடன் மற்றும் பாவத்துடன் நடத்துவதன் மூலம் மகத்தான ஆனந்தத்தை பெற்றார்கள் என்றால் மிகையாகாது.. ஸ்ரீ சீனிவாசசுவாமி கல்யாணம் பக்தர்களுடைய ஆடல் பாடலுடன மிக விமர்சையாக நடைபெற்ற இந்த தெய்வ திருமணத்தில் மணமக்கள் ஊர்வலம், ஊஞ்சல், பிடி சுற்றல், மற்றும் நாம சங்கீர்த்தனம் பாடி, மாங்கல்ய தாரணத்துடன் வைதீக முறைப்படி ஸ்ரீனிவாச கல்யாணம் நடைபெற்றது. கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான முறையில் கல்யாண போஜனம் அளிக்கப்பட்டது.

ஸ்ரீவாரி கோயிலுக்குள் தினமும் ஏழுமலையான் தனது மனைவிகளான பூதேவி மற்றும் ஸ்ரீதேவியுடன் கல்யாண மஹோத்ஸவம் நடை பெறும் நித்யகல்யாணத்தை திருமால் நடத்துகிறார் என்பது அனவரும் அறிந்ததே . பலதடைகள் காரணமாக வெலிங்டன் போன்ற தொலைதூரப் பகுதிகளைச்சேர்ந்தவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்பு அரிதாகவே கிடைக்கிறது. இந்த சேவா சங்கம் வெலிங்டன் பக்தர்களுக்காக ஸ்ரீனிவாச கல்யாணம் உறுப்பினர்களுடன் சேர்ந்து நடத்தியது பாராட்டப்படக்கூடிய ஒன்றாகும். இந்த நிகழ்ச்சியானது சனாதன தர்மம்,இந்திய கலாச்சாரம் , வாழ்க்கை முறை, உலகளாவிய அமைதி மற்றும் சமூகத்தின் செழிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை போற்றும் விதமாக அமைந்தது எனலாம். இது நமது அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு இந்து தர்மம் மற்றும் கலாச்சாரம் திருமணத்தில் நடக்கும் பல்வேறு சடங்குகளின் முக்கியத்துவம் அதன் தாத்பர்யத்தை நேரில் பார்க்கவும், கற்றுக்கொள்ளவும், பங்கேற்கவும், புரிந்து கொள்ளவும் மற்றும் அனுபவிக்கவும் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

இந்த தர்ம பரிபாலன சேவா சங்கம் கைங்கர்யங்களுடன் அயராது சேவை செய்யும் பக்தர்களயும் தொண்டர்களையும் பெ ற்றிருப்பது அதிர்ஷ்டம். இந்த நிகழ்வுகளின்மூலம் கிடைக்கும் நன்கொடை வெலிங்டனில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோவிலுக்கு கட்டுவதற்கு உதவியாக உள்ளது.

- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்


Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us