தமிழன்பு கொண்டவரின் பிரிவு -வளைகுடாப்பகுதித் தமிழ் மன்றம் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

தமிழன்பு கொண்டவரின் பிரிவு -வளைகுடாப்பகுதித் தமிழ் மன்றம்

ஜூலை 24,2022 

Comments

ஆறு என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் ஆறுமுகம் பேச்சிமுத்து கடந்த சூலை 20, 2022ஆம் நாள் எதிர்பாராமல் நம்மை விட்டு பிரிந்தார் என்பதை அறிந்து சொல்லெணா துயர் கொள்கிறோம்.

ஆறு அவர்களுக்கு அறிமுகம் தேவையன்று, வளைகுடாப்பகுதித் தமிழ் மன்றம் மற்றும் அமெரிக்க தமிழ்ச் சங்கங்கள் கூட்டமைப்பு (FETNA) மூலம் அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியன. அவரை அறிந்தவர் அறியக்கூடும், ஆறு ஒரு தலைசிறந்த தன்னார்வத் தொண்டர், தொண்டூழியம் கொண்டுவளைகுடாப்பகுதித் தமிழ் மன்ற தலைவராகவும், அமெரிக்க தமிழ்ச் சங்கங்கள் கூட்டமைப்பு மற்றும் உலக தமிழரமைப்பின் செயலராகவும் திறம்பட தொண்டாற்றினார்.

அமெரிக்கத் தமிழ் வானொலி போன்ற பல இலாப நோக்கமற்ற நிறுவனங்களை கட்டமைத்து தன்னை ஒரு தொழில்முனைவோராகவும் அடையாளப்படுத்தி கொண்டார்.

இணையர் ஜுலிட், மகன்கள் பிரதீப், கவின், மகள் நிலா ஆகியோருடன் DUBLIN,CA நகரில் வாழ்ந்து வந்த ஆறு, சிறந்த சமூக செயற்பாட்டாளராகவும் விளங்கினார். எதிபாராத இந்நிகழ்வால் உடைந்து போயிருக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தேறுதல் சொல்லும் இவ்வேளையில், நம்மால் ஆன உதவிகளை அளித்து ஆறு அவர்களின் கனவுகள் கைகூட கைகோர்ப்போம்.

அன்னார் அவர்தம் அறச்செயல்கள் மூலம் என்றும் நம் நெஞ்சில் வாழ்வார் என்பதில் ஐயமில்லை.

நம்மில் ஒருவரான அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும் வளைகுடாப்பகுதித் தமிழ் மன்றம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.

- நமது செய்தியாளர் லக்குரெட்டி அழகர்சாமி


Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்.,4 ல் ஆஸ்திரேலியாவில் கணேஷ் விசர்ஜனம்

செப்.,4 ல் ஆஸ்திரேலியாவில் கணேஷ் விசர்ஜனம்...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us