இன்னொரு அமெரிக்க ஆலயத்திற்கும் இராஜ கோபுரம் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

இன்னொரு அமெரிக்க ஆலயத்திற்கும் இராஜ கோபுரம்

ஜூலை 24,2022 

Comments

அமெரிக்காவில் நார்த் கரோலினா மாகாணத்தில் கேரி நகரில் சேப்பல் ஹில் சாலையில் அமைந்துள்ள ஶ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயம் விரிவாக்கம் நடைபெறுகிறது. பதினான்கு ஆண்டுகளான இந்த கோவிலுக்கு 87 அடி உயரத்தில் 7 அடுக்கு இராஜ கோபுரம் எழுப்பப் பட்டு வருகிறது. தென்னகத்திலிருந்து ஆலயகட்டுமான நிபுணர்கள் இங்கு வந்து தங்கி பணிபுரிகிறார்கள். எழும்பி வரும் கோபுரம் இப்போதே அன்னாந்து பார்த்து பிரமிக்க வைக்கிறது. கொரான காலத் தடங்கல்களால் தாமதமாகும் இந்த கோபுரம் அடுத்த ஆண்டு நிறைவேறி விடுமாம். இங்கு எழுந்து நின்றருளும் பாலாஜி திருப்பதியை நினைவுப்படுத்துகிறார்! பத்மாவதி தாயாரும், கோதாதேவியும் அருள் பாலிக்கின்றனர் ஆஞ்சநேயர், சுதர்சனம், விஸ்வக்சேனா வையும் தரிசிக்கலாம். இதே வளாகத்தில் அருகில் சிவன் கோவிலும் உள்ளது. அங்கு, கணபதி, முருகன்,சிவன், பார்வதி, நடராஜர், ஐயப்பன், நவக்கிரகங்கள் எல்லாம் தரிசித்து மகிழலாம்.

- தினமலர் வாசகர் டிஎம். நாகராஜன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்.,4 ல் ஆஸ்திரேலியாவில் கணேஷ் விசர்ஜனம்

செப்.,4 ல் ஆஸ்திரேலியாவில் கணேஷ் விசர்ஜனம்...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us