சென்னை ஜனனிக்கு சிறந்த ஆசிய பாடகி விருது | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

சென்னை ஜனனிக்கு சிறந்த ஆசிய பாடகி விருது

ஆகஸ்ட் 02,2022 

Comments

 அமெரிக்கா, லாஸ்ஏஞ்சல்ஸில் நடைபெற்ற கண்டங்களுக்கு இடையேயான இசை விருது போட்டியில், சென்னையைச் சேர்ந்த எஸ்.ஜெ.ஜனனி விருது பெற்றுள்ளார். மகாகவி பாரதியாரின் நளிர் மணி நீரும் என்ற பாடலைப் பாடி ஆசியாவில் சிறந்த பாடகி என்று இந்த விருதைப் பெற்றுள்ளார்.

இசை மூலம் அமைதியைப் பரப்பி வரும் ஜனனி, 2002ல் பிரதமரின் ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதையும் 2018 ல் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெறறவர்.

பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், இந்திய இசையில் முதுகலைப்பட்டமும், எம்.,பில் பட்டமும் பெற்ற இவர் தற்போது பிஎச்.டி செய்து வருகிறார்.

இந்திய மற்றும் மேல்நாட்டு பாரம்பரிய இசைக்கலைஞர், இசை அமைப்பாளர், பிண்ணனி பாடகர், பாடல் எழுதுபவர், கர்நாடக இசை கீ போர்டு வாசிப்பவர், இசை ஆராய்ச்சியாளர் என பன்முகம் கொண்டவர்.

2018 ல் புதிய உலகம் மலருட்டுமே என்ற பாடலுக்காக லாஸ் ஏஞ்சல்ஸில் உலகளாவிய அமைதி பாடல் விருதையும், மேலும் 4 பாடல்களுக்காக 6 உலகளாவிய இசை விருதுகளையும் பெறறவர்.

அமெரிக்கா, கலிபோர்னியாவில் உள்ள பூமி அமைதிக்கான அமைப்பின் இசைத் தூதராகவும், ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

அகில இந்திய வானொலியின் ஏ கிரேடு கலைஞர் என்ற முறையில் பல விருதுகளைப் பெறறுள்ளார்.

பிரான்ஸ், பாரிசில் பண்டிட் ஹரிபிரசாத் சவ்ராசியாவுடனான ஜுகல்பந்தி உட்பட ஆரியத்து 100 மேடை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.

பிரபா என்ற தமிழ்ப் படத்தில் இவருடைய குரு பாலமுரளிகிருஷ்ணா பாடிய பாடலுக்கு இசை அமைத்துள்ளார்.

80க்கும் மேற்பட்ட சாதனைகள் புரிந்தவர்.

பல இசை ஆல்பங்கள், குறும்படங்கள் மற்றும் விளம்பரங்களுக்கு இசை அமைத்துள்ளார்.


https://www.youtube.com/watch?v=fUfkTZglIgQ&authuser=0

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்.,4 ல் ஆஸ்திரேலியாவில் கணேஷ் விசர்ஜனம்

செப்.,4 ல் ஆஸ்திரேலியாவில் கணேஷ் விசர்ஜனம்...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us