அபுதாபி : அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் லைப்லைன் மருத்துவமனை கட்டணமில்லா மருத்துவ சலுகை அட்டை சங்க உறுப்பினர்களுக்கு நான்காவது முறையாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 350 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
அபுதாபியில் வசிக்கக்கூடிய அனைத்து அய்மான் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு மருத்துவ மனை நிர்வாகம் ஜீவன் ரக்க்ஷா எனும் மருத்துவ சலுகை அட்டை நான்காம் கட்டமாக அய்மான் சங்கத்தில் முன் பதிவு செய்த நபர்களுக்கு வழங்கப்பட்டது.
நான்காம் கட்டமான விழா நிகழ்வு கடந்த ஜூலை 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 முதல் மாலை 5 வரை எலக்ட்ரா ரோட்டில் அமைந்துள்ள மருத்துவமனை கட்டிடத்தில் மிக சிறப்பானமுறையில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் அய்மான் தலைவர் கீழக்கரை ஹெச்.எம்.முஹம்மது ஜமாலுத்தீன் அவர்களின் ஆலோசனைப்படி மூத்த நிர்வாகி ஆவை A. S.முஹம்மது அன்சாரி மற்றும் நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் மக்கள் தொடர்புச் செயலாளர் தேவிப்பட்டிணம் ஹாஜா முபீனுத்தீன்,கீழக்கரை ஏ.ஹெச். செய்யது முஹம்மது பாசில், நிர்வாக செயற்குழு உறுப்பினர், கீழக்கரை அஜ்மல் தாஹிர், ஆவை முஹம்மது யாசிர், செயற்குழு உறுப்பினர் லெப்பை தம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோன்று ஏற்கனவே அய்மான் சங்க உறுப்பினர்களுக்கு மூன்று கட்டமாக 850 குடும்பங்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் இலவச மருத்துவ முகாம் மற்றும் மருத்துவ சலுகை வழங்கும் அட்டை வழங்கும் நிகழ்ச்சி ஏற்கனவே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
- நமது செய்தியாளர் காஹிலா
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.