சிங்கப்பூரில் வரலட்சுமி விரத வழிபாடு | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

சிங்கப்பூரில் வரலட்சுமி விரத வழிபாடு

ஆகஸ்ட் 06,2022 

Comments

ஆடி மாதப் பண்டிகைகளில் வரலட்சுமி விரத வழிபாடு விசேஷமானது. சகலவித சௌபாக்கியங்களுக்கும் பதினாறு வகை செல்வச் செழிப்புக்கும் அதிபதியான ஸ்ரீ மகா லட்சுமியின் அருள் வேண்டி ஆடி மாதம் வளர் பிறையில் நிறைமதி நாளுக்கு முந்தைய வெள்ளிக் கிழமை கொண்டாடப்படுவது வரலட்சுமி விரதம். தங்கள் கணவன் தீர்க்காயுளோடும் பரிபூரண ஆரோக்கியத்துடனும் செல்வத்துடனும் நீடு வாழவும் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைபெறவும் விரதம் மேற்கொள்ளுவதே வரலட்சுமி வழிபாடு.

இல்லத்தைத் தூய்மைப்படுத்தி கலசத்தில் பச்சரிசி – எலுமிச்சை – பொற்காசுகள் போன்றவற்றை இட்டு – பட்டாடை சுற்றி – மஞ்சள் கலசத்தில் குங்குமம் வைத்து மஞ்சள் சரடைக் கட்ட வழிபாட்டிற்குப் பின் சுமங்கலிப் பெண்களுக்கு வழங்கி – பின் தாங்களும் கட்டிக் கொள்ளுவது மரபு.

சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தில் வரலட்சுமி விரத வழிபாடு ஆகஸ்டு ஐந்தாம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கு ஸ்ரீ அம்பிகை முன் கலசம் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. பொற்கலசத்தில் வைத்துப் பூஜிக்கப்பட்ட மஞ்சள் கயிறுகள் மங்கல மகளிர்க்கு அளிக்கப்பட்டது. உபயதாரர்கள் - பங்கேற்ற மகளிர்க்கு மங்கலப் பொருட்களை வழங்கி ஆசிர்வதித்தனர்.

தலைமை அர்ச்சகர் நாகராஜ சிவாச்சாரியார் வரலட்சுமி நோன்பு மகிமையை விரிவாக எடுத்துரைத்தார். சுரேஷ் குமார் தலைமையிலான ஆலய மேலாண்மைக் குழுவினர் விழா ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். விழா நிறைவில் பங்கேற்றவர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us