சிங்கப்பூர் ஆலயத்தில் சிறப்பு சந்தனக்குட அபிஷேக வழிபாடு | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

சிங்கப்பூர் ஆலயத்தில் சிறப்பு சந்தனக்குட அபிஷேக வழிபாடு

ஆகஸ்ட் 10,2022 

Comments

சிங்கப்பூர் தேசிய ( சுதந்திர ) தினச் சிறப்பு நிகழ்ச்சியாக சமூக அமைப்புக்கள் விழா எடுப்பதோடு ஆலயங்களும் சிறப்பு வழிபாடுகளை நடத்துகின்றன. தொபாயோ ஸ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் வான் மழை வளாது பொழியவும் – மேன்மைகொள் சைவ நியதி செழித்திடவும் – கோன்முறை கோடாது உயரவும் – மக்கள் பசி – பகை – பிணியின்றி வாழவும் ஆகஸ்டு ஒன்பதாம் தேதி சிறப்பு சந்தன குட அபிஷேக வழிபாடு நடைபெற்றது.

சங்கல்பத்துடன் விழா தொடங்கியது. விக்னேஸ்வர பூஜை தொடர சிறப்பு ஹோமம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தப் பெருமக்கள் சந்தனக் குடங்களை அணிவகுத்து ஆலயம் வலம் வந்து ஸ்ரீ அம்பிகைக்கு சமர்ப்பித்தனர். ஸ்ரீ லலிதா த்ரிசதி அர்ச்சனை அடுத்த அங்கமாக இடம் பெற்றது. ஸ்ரீ வைராவி மட காளியம்மன் குளிர்ந்திட பக்தர்கள் சமர்ப்பித்த சந்தனக் குட அபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

சர்வ அலங்கார நாயகியாக ஸ்ரீ அம்பிகை எழுந்தருளிக் காட்சியளிக்க மகா தீபாராதனை நடைபெற்ற போது பக்தர்கள் உருக்கத்தோடு “ ஓம் சக்தி ...ஓம் சக்தி “ முழக்கமிட்டது மெய்சிலிர்க்க வைத்தது. நிறைவாக பங்கேற்றவர்களுக்கு அருள் பிரசாதத்துடன் அன்னப் பிரசாதமும் வழங்கப்பட்டது. ஆலய மேலாண்மைக் கழக நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்


Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்.,4 ல் ஆஸ்திரேலியாவில் கணேஷ் விசர்ஜனம்

செப்.,4 ல் ஆஸ்திரேலியாவில் கணேஷ் விசர்ஜனம்...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us