சிங்கப்பூரில் திருமுறை மாநாடு | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

சிங்கப்பூரில் திருமுறை மாநாடு

ஆகஸ்ட் 14,2022 

Comments

சைவ சமயத்தின் சிறப்பையும் பெருமையையும் நெறிமுறையையும் பன்னிரு திருமுறைகள் வழி தமிழ்ச் சமுதாயம் அறிந்து கொள்ள 1981 ஆம் ஆண்டு க.அம்பலவாணர் சிங்கப்பூரில் திருமுறை மாநாட்டைத் தொடக்கி வைத்தார். அது இன்று பல்கிப் பெருகி 42 ஆவது ஆண்டு திருமுறை மாநாடாக மலர்ந்துள்ளது. ஜூலை 29 – 30 – 31 ஆம் தேதிகளில் சவுத் பிரிட்ஜ் சாலை அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் திருமுறை வழிபாடு – இன்னிசை – மாணவர் படைப்பு – சிறப்புச் சொற்பொழிவுகள் – வினா – விடை அங்கம் எனக் கோலாகலமாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக டாக்டர் இக்குவனம் சுவாமிநாதன் கலந்து கொண்டார். தேவகோட்டை பிரபல ஆன்மிகச் சொற்பொழிவாளர் ந.ஸ்ரீநிவாசன் சிறப்புரை ஆற்றினார்.

29 ஆம் தேதி மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் முனைவர். இராம கருணாநிதி தலைமையில் – விநாயகர் – தில்லை நடராசர் பூசையுடன் மாநாடு தொடங்கியது. இராமச்சந்திர ஓதுவாரின் தேவார இன்னிசை தொடர்ந்தது. அடுத்த அங்கமாக திருமுறை ஓதும் போட்டிகளில் முதற் பரிசு பெற்ற குழுக்களின் இன்னிசை அரங்கு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. செயலாளர் கண்ணா.கண்ணப்பன் இன்றைய நிகழ்வில் வரவேற்புரை ஆற்றினார்.

30 ஆம் தேதி அருள்மிகு தண்டாயுதபாணி ஆலய ஓதுவார் வைத்தியநாத தேசிகர் மற்றும் சிவ சுப்பிரமணிய ஓதுவார் ஆகியோரின் திருமுறை இன்னிசையுடன் நிகழ்வு தொடங்கியது. திருமுறைப் பேச்சுப் போட்டிகளிலும் ஓதும் போட்டிகளிலும் முதற் பரிசு பெற்ற மாணவச் செல்வங்களின் படைப்புக்கள் அடுத்த அங்கமாக இடம் பெற்று அரங்கைத் தம் வசமாக்கின. “ திருமுறை 100 – பாட்டும் பொருளும் “ என்ற நூல் வெளியீடு அடுத்த அங்கமாக இடம் பெற்றது. சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியத் தலைமை நிர்வாகி ராஜசேகர் நூலினை வெளியிட்டு அதன் சிறப்புக்களை எடுத்துரைத்தார்.

31 ஆம் தேதி நிகழ்வு மார்ஷலிங் அருள்மிகு சிவ கிருஷ்ணா ஆலயத் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வைத்தியநாத தேசிகரின் பூசையுடன் நிகழ்வு தொடங்கியது. நா.சுப்பிரமணியம் தலைமை ஏற்றார். சிவ கிருஷ்ணா ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் சுரேஷ்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். திருமுறையில் பக்தி நெறி என்ற தலைப்பில் தேவகோட்டை ஸ்ரீநிவாசன் சிறப்புரை ஆற்றினார். நாயன்மார் குருபூசை தெய்வீக சூழுலைத் தோற்றவித்தது. பார்வையாளர்களின் ஐயங்களைத் தமிழறிஞர் சுப.திண்ணப்பன் மற்றும் தேவகோட்டை ஸ்ரீநிவாசன் ஆகியோர் தெளிவாக விளக்கித் திருமுறைச் சுவையூட்டினர். சிவ பழனிவேல் மற்றும் சிவனடியார்கள் நடத்திய ஐந்தெழுத்து வேள்வி மெய்சிலிர்க்க வைத்தது. சைவநெறிச் செல்வர் ஆ.ரா.சிவக்குமாரன் நன்றி நவில நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

ந.ஸ்ரீநிவாசன் ஆன்மிக இலக்கிய உரை டெப்போ சாலை அருள்மிகு ருத்ர காளியம்மன் ஆலயத்திலும் நடைபெற்றது. “ - திருமுறையில் தொண்டு நெறி “ “ திருமுறையில் ஞானநெறி “ – “ திருமுறையில் பக்தி நெறி “ என்ற தலைப்புக்களில் தேவகோட்டை ஸ்ரீநிவாசன் ஆற்றிய ஆன்மிக உரைகள் சிங்கப்பூர் திருமுறை அன்பர்களை மிக நெகிழ வைத்தன.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்


Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்.,4 ல் ஆஸ்திரேலியாவில் கணேஷ் விசர்ஜனம்

செப்.,4 ல் ஆஸ்திரேலியாவில் கணேஷ் விசர்ஜனம்...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us