பஹ்ரைன் அஸ்கர் பகுதியில் தொழிலாளர் விடுதியில் சுதந்திர தின விழா | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

பஹ்ரைன் அஸ்கர் பகுதியில் தொழிலாளர் விடுதியில் சுதந்திர தின விழா

ஆகஸ்ட் 15,2022 

Comments

இந்திய திருநாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பஹ்ரைனின் புறநகர் பகுதியான அஸ்கர் பகுதியில் அமைந்துள்ள இந்தியர்கள் அதிகமாக உள்ள தொழிலாளர் விடுதியில் சுதந்திர தின விழா அன்னை தமிழ் மன்றத்தின் மூலம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தொழிலாளர்கள் அனைவருக்கும் இனிப்பு மற்றும் வெப்பத்திலிருந்து தற்காத்து கொள்வதற்கு உரிய ஊட்டச்சத்து மிக்க பழங்கள், மோர்,மதிய உணவு வழங்கி சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அன்னை தமிழ் மன்றத்தின் தலைவர் திரு செந்தில் ஜி கே அவர்கள் தொழிலாளர்களுக்கு தற்கொலைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை வழங்கினார்.

பொதுச் செயலாளர் திரு தாமரைக்கண்ணன் அவர்கள் மது மற்றும் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பற்றியும் பஹ்ரைன் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வேலை இடங்களில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்தார்,

இந்த விழாவின் பொறுப்பாளரான அன்னை தமிழ் மன்றத்தின் சமூக நலத்துறை செயலாளர் திரு அருண் ராமலிங்கம் அவர்களுக்கும் தொழிலாளர் விடுதியின் சார்பாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்ய உதவியாக இருந்த நிர்வாகிகளும் அன்னை தமிழ் மன்றத்தின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளரால் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் அன்னை தமிழ் மன்றத்தின் நிர்வாக உறுப்பினர்கள் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

 - நமது செய்தியாளர்பெ. கார்த்திகேயன்


Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us