நான் நேரில் கண்ட இரண்ய அம்மன் கோயில் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

நான் நேரில் கண்ட இரண்ய அம்மன் கோயில்

ஆகஸ்ட் 17,2022 

Comments

சென்னை வண்டலூர் -வனவிலங்கு பூங்காவின் சிறப்பு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல,சுற்றுலா வரும் பிற மாநிலத்தவர்களுக்கும் நன்கு தெரியும். அதனினும் சிறப்பு அவ்வூர் மக்களின் காக்கும் காவல் தெய்வமாய், அவர்களின் பிரியத்திற்குரிய செல்ல மகளாய், தங்களின் உறுதுணையாய் போற்றி வழிபடும் இரண்ய அம்மன் அங்கு வீற்றிருக்கிறாள் தெய்வமாய்!

அமெரிக்காவில் இருந்து எப்போது சென்னை சென்றாலும் எனக்கு பிடித்த அம்மனை காணாமல் வந்ததில்லை. நான் கண்டிருக்கிறேன் அக்கோவிலுக்கு வரும் அலைமோதும் கூட்டமும், அங்கு வருவோரின் ஆழ்ந்த முரட்டுத் தனமான அன்பும்! என் சகோதரர் திரு.சுப்ரமணியன் அங்கு பூஜை பண்ணும் பாக்கியம் பெற்றிருக்கிறார். மழையோ,வெள்ளமோ ஏன் தீவிரமான கொரோனா காலத்தில் கூட அரசு கடுமையாக போட்ட உத்தரவு நாட்களைத் தவிர ஒரு நாள் கூட அம்மனுக்கு பூஜையும்,நைவேத்தியமும் அவர் அளிக்காமல் இருந்ததில்லை.

சென்னை பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் வண்டலூரில் ஸ்ரீராம் ஐடி பார்க் மற்றும் ஆக்சென்ச்சர் வளாகத்திற்கு வெளியே இரண்ய அம்மன் கோயில் அமைந்துள்ளது. இரண்ய அம்மன் மிக பிரசித்தி பெற்றவள். அவ்வழியே வெளியூர் செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பான பயணம் மற்றும் விபத்துகளைத் தவிர்க்க அருள்பாலிக்கிறாள். எனவே கோயிலில் நின்று அம்மனின் ஆசியை பெற்ற பின்னரே டிரைவர்கள் வாகனங்களை தொடர்ந்து ஓட்டுவார்கள். வாகனங்களுக்கான பூஜை தினந்தோறும் நடைபெறுகிறது. கோயிலின் முன்புறம் எப்போதும் வாகனங்களால் நிரம்பி வழிகிறது. அம்மனின் முன்னால் பிரபல அரசியல்வாதிகளில் இருந்து,நடிகை நடிகைகள், கோடீஸ்வரர்கள் என எந்த பாரபட்சமும் இன்றி நின்று வணங்கி விட்டுச் செல்வர்.

நான் சொன்னது போல இம்முறை அமெரிக்காவில் இருந்து கடந்த மாதம் விடுமுறையில் சென்ற போது ஆடி ஒன்றாம் தேதி அன்று அம்மனை தரிசிக்க சென்றேன். பிறந்த வீட்டுக்கு ஒரு பெண் ஆசை ஆசையாய் ஓடி வருவதை போல வந்து, பொங்கல் வைக்க போட்டி போட்டுக்கொண்டு இடம் பிடிப்பதும், மணமும் சுவையாய் பொங்கல் வைத்து அம்மனுக்கு சென்று படைப்பதுமாய் ஏகப்பட்ட கூட்டம்!

விடிகாலை வந்து தொடர்ந்து பணியாற்றும் கோவில் சம்பந்தப்பட்டவர்களுக்கோ நேரம் ஆகிக்கொண்டே போகிறது. தாமதமாக வருவோரை எத்தனை தடுக்க முயன்றும் இவர்களால் முடியவில்லை. என் அம்மனுக்கு நாங்கள் பொங்கல் வைத்தே தீருவோம் என்று குடும்பம் குடும்பமாக வந்தது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. அவர்களின் உரிமை மிக்க அன்பில் இவர்கள் தோற்றுத் தான் போனார்கள்!

ஆடி மாதம் முழுவதும் பலவித அலங்காரங்களும், கூழ் ஊற்றுதலும், திருவிழாவுமாக அத்தனையும் அற்புதமாய் நடைபெறுகிறது. ஆடி மட்டுமின்றி அனைத்து மாதங்களும் விசேட நாட்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.வண்டலூர் மட்டுமல்ல பெருங்களத்தூர்,அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் வசிப்போரைக் கேட்டுப் பாருங்கள் அம்மனின் மகிமையை புகழ்ந்து கூறுவார்கள். அவளின் அருளால் பயனடைந்தோர் ஏராளம் ஏராளம்! பயணம் செல்வோரை காத்து அருள் புரியும் அம்மனின் அருளை சொல்லிக்கொண்டே போகலாம்!

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us