நித்யஶ்ரீ மூர்த்தி பரதநாட்டிய அரங்கேற்றம் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

நித்யஶ்ரீ மூர்த்தி பரதநாட்டிய அரங்கேற்றம்

ஆகஸ்ட் 19,2022 

Comments

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த மாணவி நித்யஶ்ரீ மூர்த்தியின் பரதநாட்டிய அரங்கேற்றம் ருத்ராலயம் நடனப் பள்ளி சார்பாக லேக் ஃபாரஸ்ட் அரங்கில் இனிதே நிகழ்வுற்றது. வெளிநாட்டில் வாழும் சூழலிலும் நித்யஶ்ரீ தன் திறம்மிக்க நடனத்தின் வாயிலாக நம் நாட்டின் பாரம்பரியத்தைக் கடல் கடந்து மண்மணம் வீசும்படி செய்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும்போதிலும் தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் உளமார நேசிக்கும் நித்யஶ்ரீக்கு வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும், பள்ளி குழுமமும், பார்வையாளர்களும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

நடன ஆசிரியர் மஹாலஷ்மி பாலாஜியின் திறன்மிகு நடன அமைப்பையும் அவரின் நேர்த்தியான ஒப்பற்ற முயற்சியை அனைவரும் பாராட்டினர். தமிழ்மொழி மீதான இத்தகைய நேசத்தைச் சிறு வயதிலிருந்தே தங்கள் மகளுக்கு ஊட்டி வளர்த்த நித்யஶ்ரீயின் பெற்றோருக்கும் வாழ்த்துகள் குவிந்தன.

- தினமலர் வாசகி சுதா

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us