சிங்கப்பூரில் இலக்கிய நிகழ்ச்சி | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

சிங்கப்பூரில் இலக்கிய நிகழ்ச்சி

ஆகஸ்ட் 19,2022 

Comments

சிங்கப்பூர் வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் 58 ஆவது நிகழ்வு ஆகஸ்டு 13 ஆம் தேதி பொங்கோல் சமூக மன்ற அரங்கில் நடைபெற்றது. வாழ்க நிரந்தரம் என்ற தமிழ் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்வு தொடங்கியது. பொழில் வாழ்த்துப் பாடலும் தொடர்ந்தது. சிறுவர் அரங்கத்தில் பிரவித பிரகாஷ்ராஜ் பாரதி பாடல்களைப் பாடினார். குணந்த் – சதீஷ் பிரித்வி ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கு பெற்றனர். 

நிவிதா பிரகாஷ் ஆத்தி சூடி பாட – ஜோஷித் திருக்குறள் உணர்த்தும் நீதிக் கதைகளை “ சிங்கமும் முட்டாள் கழுதையும் “ என்ற தலைப்பில் பேசினார். அமைப்பின் தலைவர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி “ அகவை “ என்ற தலைப்பில் அறிமுக உரை ஆற்றினார். சென்னையைச் சேர்ந்த முனைவர் அரு.அபிராமி “ இம்மைக்குச் செவ்வேள் துணை “ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். 

முன்னதாக சவிதா வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வின் காணொளியை முகநூல் வழியும் பொழில் பண்பலைவழியும் மஹஜபீன் மற்றும் குமரேசன் ஆகியோர் நேரலையாக ஒளி பரப்பினர். சவிதா நிகழ்வினை நெறிப்படுத்தினார். தகவல் : எல்ல.கிருஷ்ணமூர்த்தி

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்


Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us