தமிழக தொழிலாளியின் அஸ்தியை சொந்த ஊர் கொண்டு செல்லும் முஸ்லிம் பெண் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

தமிழக தொழிலாளியின் அஸ்தியை சொந்த ஊர் கொண்டு செல்லும் முஸ்லிம் பெண்

ஆகஸ்ட் 19,2022 

Comments

துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மான் நகரில் வேலை செய்து வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த தங்கப்பன் ராஜ்குமார் கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்தார். இதனால் அவரது உடல் அல் அய்னில் எரியூட்டப்பட்டது. தங்களது தந்தையின் இறந்த உடலை பார்க்கத்தான் முடியவில்லை. அவரது அஸ்தியை யாராவது கொண்டு வந்து தருவார்களா என அவர்களது பிள்ளைகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அஜ்மான் ஆஸ்பத்திரியில் அஸ்தியை சிஜோ பால் பெற்றுக் கொண்டார் இது குறித்து தெரிய வரவும் அல் அய்ன் சமூக சேவகி தாகிரா கல்லுமுரிக்கல் சொந்த ஊர் கொண்டு செல்ல ஒப்புக் கொண்டார். இதற்கான ஆவணங்களை இந்திய துணை தூதரகம் வழங்கியது. இந்த பணியில் தனக்கு உதவிய அல் அய்ன் இந்திய சமூக மையத்தின் தலைவர் கீழக்கரை முபாரக் முஸ்தபா, சமூக ஆர்வலர் முதுவை ஹிதாயத் உள்ளிட்டோருக்கு தனது நன்றியை தாகிரா தெரிவித்தார்.

கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவரின் அஸ்தியை பெற்று சொந்த ஊருக்கு கொண்டு செல்வது மனிதநேயத்தை வலியுறுத்துவதாக அமைந்திருந்தது. இந்த பணியை மேற்கொள்ளும் தாகிராவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us