சிங்கப்பூரில் ஸ்ரீ லட்சுமி சுதர்ஸன மஹா யாகம் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

சிங்கப்பூரில் ஸ்ரீ லட்சுமி சுதர்ஸன மஹா யாகம்

செப்டம்பர் 14,2022 

Comments

சிங்கப்பூரின் பிரபல வைஷ்ணவ ஸ்தலமான ஸ்ரீ சீதா லட்சுமண சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி எழுந்தருளி அருள்பாலித்து வரும் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலய வருடாந்திர உற்சவத்தை முன்னிட்டு செப்டம்பர் 9 – 10 – 11 ஆம் தேதிகளில் ஸ்ரீ லட்சுமி சுதர்ஸன மஹா யாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மிக நீண்ட இடைவெளிக்குப் பின் அரசு அனுமதியுடன் திரளான பக்தப் பெருமக்கள் கலந்து கொண்ட தெய்விகப் பக்திப் பரவச விழாவாக இது அமைந்தது.

ஒன்பதாம் தேதி நிறைமதி நாளானதால் சத்ய நாராயண பூஜையும் இணைந்து சிறப்பை இரட்டிப்பாக்கியது. பத்தாம் தேதி காலை வைகானஸ ஆகம முறைப்படி தும்பிக்கை ஆழ்வாரான ஸ்ரீ சுந்தர விநாயகருக்கு விசேஷ ஹோமங்கள் நடைபெற்றன. சந்தனக் காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ விநாயகப் பெருமான் எழுந்தருளியது கண்கொள்ளாக் காட்சியாகும். தாயார் ஸ்ரீ மஹாலட்சுமிக்கு ஸ்ரீ சூக்த ஹோமமும் திருமஞ்சனமும் நடைபெற்றன. ஸ்ரீ துர்க்கைக்கு துர்க்கா சூக்த ஹோமம் நடைபெற்றது.

பத்தாம் தேதி மாலை பிரதான வழிபாடு எஜமான சங்கல்பத்துடன் தொடங்கியது. தலைமை அர்ச்சகர் வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் தலைமையில் ஸ்ரீ லட்சுமி சுதர்ஸன ஹோமம் நடைபெற்றது. பங்கேற்ற பக்தப் பெருமக்கள் ஸ்ரீ சதர்ஸன அஷ்டக நாமாவளியை சேர்ந்திசைத்தது மெய்சிலிர்க்க வைத்தது. ஸ்ரீ லட்சுமி சுதர்ஸன யந்திரத்தை மகளிர் அற்புதமாக வரைந்து அசத்தியிருந்தனர். லட்சுமி சுதர்ஸன யந்திரமும் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத் தகுந்ததாகும்.

புனித ஹோமத்தில் வைக்கப்பட்டுப் பூஜிக்கப்பட்ட கடம் தலைமை அர்ச்சகர் சிரமேற்றாங்க மங்கல இசையுடன் ஆலயம் வலம் வரப்பெற்று சிறப்புத் திருவாராதனம் நடைபெற்றபோது பக்தப் பெருமக்கள் உருக்கத்தோடு “ கோவிந்தா ...மாதவா ..நாராயணா “ என முழக்கமிட்டது பக்திப் பெருக்கை வெளிப்படுத்துவதாக அமைந்தது. நிறைவாக சர்வ அலங்கார நாயகராக ஸ்ரீ சீதா லட்சுமண சமேத ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி எழுந்தருளி ஆலயம் வலம் வந்து அருள்பாலித்தார்.

இடையிலே நின்று போன பக்தர்கள் அமர்ந்து பெறும் பிரசாதம் தொடர்ந்தது. தலை வாழை இலையில் அறுசுவைப் பிரசாதம் அனைவருக்கும் வழங்க தெய்விக ஆனந்தத் தாண்டவமாடிற்று. ஆலய நிர்வாகம் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்


Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவ,27, அஜ்மானில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் குடும்ப சந்திப்பு

நவ,27, அஜ்மானில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் குடும்ப சந்திப்பு...

டிச., 17 - 18 நாம ருசி 2022

டிச., 17 - 18 நாம ருசி 2022...

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us