சிங்கப்பூரில் மகாகவி பாரதியார் நினைவேந்தல் கருத்தரங்கு | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

சிங்கப்பூரில் மகாகவி பாரதியார் நினைவேந்தல் கருத்தரங்கு

செப்டம்பர் 17,2022 

Comments

சிங்கப்பூர் இலக்கிய இசை அரங்கம் – ஏ ஸ்டார் அச்சீவர்ஸ் – கிரியேஷன்ஸ் அமைப்புடன் இணைந்து நடத்திய மகா கவி பாரதியார் நினைவேந்தல் கருத்தரங்கு செப்டம்பர் 11 ஆம் தேதி தேசிய நூலக வளாக அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. “ பாரதி எனும் அணையா விளக்கு “ எனும் பொதுத் தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கு பல்கலைச் செல்வர் முனைவர் மன்னை ராஜகோபாலன் தலைமையில் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களோடு நடைபெற்றது.

மாணவி அக்க்ஷைனி தனபாலனின் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்வு தொடங்கியது. “ அறம் பாட வந்த அறிஞன் “ என்ற தலைப்பில் இராம்குமார் சந்தானம் உரையாற்றினார். “ பெண்ணியம் காத்த போர் வாள் “ என்ற தலைப்பில் அனுராதா வேங்கடேஸ்வரனும் – “ மறம் பாட வந்த மறவன் “ என்ற தலைப்பில் ஸ்வர்ணலதா ஆவுடையப்பனும் – “ நற்றமிழ் வாணன் “ என்ற தலைப்பில் மஹ்ஜபீனும் – சமூக நீதிக் காவலன் என்ற தலைப்பில் வெண்ணிலாவும் உரையாற்றினர்..

பாரதி மகள் விருது பெற்ற “ ஏ ஸ்டார் அச்சீவர்ஸ் – கிரியேஷன்ஸ் அமைப்பின் இயக்குநர் மஹ்ஜபீன் ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்திருந்தார். பங்கேற்ற இலக்கியச் சுவைஞர்கள் கரமதிர்த்து நிகழ்வினைக் கலகலப்பாக்கினர். எழிலி கருணாகரன் நிகழ்வினைச் சுவைபட நெறிப்படுத்தினார்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்


Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்.,4 ல் ஆஸ்திரேலியாவில் கணேஷ் விசர்ஜனம்

செப்.,4 ல் ஆஸ்திரேலியாவில் கணேஷ் விசர்ஜனம்...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us